
தீபாவளி என்பது தமிழனுக்கான பண்டிகை கிடையாது. ஆனால் திபாவளிக்கு கொளுத்தி மகிழும் பட்டாசு, வான வேடிக்கை, மத்தாப்பு போன்றவற்றை தொண்ணுறு விழுக்காடு இந்தியாவுக்கு வழங்குவது தமிழகம் மட்டுமே. குறிப்பாக கரிசல் காட்டு மண் சிவகாசி தான் இதன் மூலதனம். ஒவ்வொரு தீபாவளிக்கும் இந்தியர்கள் தங்கள் மகிழ்ச்சியையும் தங்களது தகுதியையும் காட்ட பயன்படுத்துவது இந்த பட்டாசுகளை தான். ஆரம்ப காலத்தில் சப்த்தம் அதிகமான பட்டாசுகள் தான் பணம் படைத்தவர்களால் விரும்பப்பட்டு வந்தது. அதனை கண்டு இல்லாதோரும் தங்கள் குறைந்த பண சக்திக்கு தக்க தன் பிள்ளைகளுக்கு குறைந்த சப்த்தம் வரக்கொடிய ஓலை வெடி, வரி வெடி, சீனி வெடி எனப்படும் பிஜிலி வெடி போன்றவற்றை வாங்கி கொடுத்து இல்லாத இன்பத்தை இதில் தேடினர்.