
ஆற்று பாசனம் பக்கத்து மாநிலத்தினால் தடைபட்டு போனது..
மலை நீர்தான் கிடைக்கவில்லை, மழை நீராவது கிடைக்குமா??
பெய்யும் மழை நீரை தேக்கி வைக்கும் கண்மாய், ஊரணிகளில் மனித குடியேற்றம்..
அவர்களுக்கு என்னவோ வெள்ள நிவாரண நிதி காத்திருக்கிறது..
விவசாயினுடைய மகனும் மகளும் பொறியாளர் ஆகினர்
அப்பன் விவசாயம் செய்த நிலத்தில் கட்டிடங்களை எழுப்பினர்
அது அவர்களின் வாரிசுகளுக்கு கல்லறைகள் என்று எப்போது உணர்வார்கள்??
மழை பொய்த்த காலங்களில் மாரியாத்தாளுக்கு கூழ் காய்ச்சி ஊற்றும் நாம்
சற்றே நிலை மாறி என்று மரங்களுக்கு நீர் பாய்ச்ச கற்றுக்கொள்வோம்??
கல் ஊண்டிய நிலங்களில் காய்ந்த சருகுகளை மேயும் ஆடுகள்..
இறைச்சிக்காக வாகன பயணம் மேற்கொள்ளும் மாடுகள்..
தன் விளை பொருளுக்கு இது நாள் வரை விலை நிர்ணயம் செய்யாத விவசாயி.,
இந்த முறையும் தோற்றான்,
படைப்பு:
இந்த முறையும் தோற்றான்,
அவன் நிலத்துக்கும் அவனால் விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை..
தனக்காக சொத்து ஏதும் சேர்த்து வைக்கத பாட்டனாரை திட்டுகிறோம்..
வரப்போகும் பேரனுக்கு சோத்தை கூட சேர்த்து வைக்க துப்பில்லாத நாம்..
படைப்பு:
சு.ரகுநாத்
thamizhmani2012@gmail.com
No comments:
Post a Comment