நேற்றைக்கு போவேன் என்பாய்;
நாளைக்கு போனேன் என்பாய்
காலப்பந்தாடும் காலன் நீ;
ஞாலம் கவரும் காமன் நீ.
மண்பிள்ளையாருடன் விளையாடுவாய்
சக்திவாய்ந்த சாமி உடையமாட்டார் என்பாய்
அதட்டியவரை நோக்கி - பார்வையில் ஆத்திகன் நீ;
சிந்தனையில் நாத்திகன் நீ.
கோபத்தில் நீ விடும் காய் சீக்கிரம்
பழுத்து பழமாகின்றது;
நண்பர்களின் தவற்றை மறக்கும்
மனப்பாங்கன் நீ.
சாக்ரடீஸ் - பெரியாரெல்லாம்
எப்போது படித்தாய்,
ஏன்? எதற்கு? எப்படி? என பதில் தெரியாக்
கேள்வி கேட்டு துளைக்கின்றாய் நீ.
உனக்கான தேவை கிடைக்கும் வரை
அடம்பிடிக்கும் போராட்டம் தொடர்வாய்;
அடியே விழுந்தாலும் அசர்வதில்லை நீ
போராளிகளின் பிம்பம் நீ.
-சு.ரகுநாத்
thamizhmani2012@gmail.com
நாளைக்கு போனேன் என்பாய்
காலப்பந்தாடும் காலன் நீ;
ஞாலம் கவரும் காமன் நீ.
மண்பிள்ளையாருடன் விளையாடுவாய்
சக்திவாய்ந்த சாமி உடையமாட்டார் என்பாய்
அதட்டியவரை நோக்கி - பார்வையில் ஆத்திகன் நீ;
சிந்தனையில் நாத்திகன் நீ.
கோபத்தில் நீ விடும் காய் சீக்கிரம்
பழுத்து பழமாகின்றது;
நண்பர்களின் தவற்றை மறக்கும்
மனப்பாங்கன் நீ.
சாக்ரடீஸ் - பெரியாரெல்லாம்
எப்போது படித்தாய்,
ஏன்? எதற்கு? எப்படி? என பதில் தெரியாக்
கேள்வி கேட்டு துளைக்கின்றாய் நீ.
உனக்கான தேவை கிடைக்கும் வரை
அடம்பிடிக்கும் போராட்டம் தொடர்வாய்;
அடியே விழுந்தாலும் அசர்வதில்லை நீ
போராளிகளின் பிம்பம் நீ.
-சு.ரகுநாத்
thamizhmani2012@gmail.com
மழலைகளின் பேச்சை அனைவரும் ரசிப்பர். முதல் முறையாக ஒரு முற்போக்கு மழலையின் பேச்சு என்னை ரசிப்பதோடு இல்லாமல் சிந்திக்க வைத்துள்ளது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களின் கருத்திற்கு நன்றி தோழர்...
DeleteArumai :(
ReplyDeleteதாமதமான பதிலுரைக்கு மன்னிக்கவும்..
Deleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..