இந்த முறை பசுமைநடையில்
மலை இல்லை கண்மாய்க்குத்தான் செல்லப்போகின்றோம் என்ற தகவல் கிடைத்தது. “என்னப்பா இப்டி
பண்ணிட்டாங்க.. அப்போ இந்த முறை மலை ஏற வாய்ப்பில்லையா” என்று புலம்பிக்கொண்டுதான்
சென்றேன். பசுமைநடை நண்பர்கள் மதுரை மாற்று (பைபாஸ்) சாலை துவக்கத்தில் எங்களுக்காக
காத்திருந்தனர். மாற்று சாலை பாலத்தில் ஏறி இறங்கி இடது கைப்பக்கம் திரும்பி இருசக்கர
வாகனங்களில் பயணிக்க துவங்கினோம். கண்மாயை ஆக்கிரமித்து இருந்த குடியிருப்பு பகுதிகளை
கடந்து சென்றோம். இடது வலது என மாறி மாறி சென்றதில் சென்ற பாதை மறந்துதான் போனது. ஒரு
வழியாக மாடக்குளம் கண்மாய்க்கு வந்து நின்றோம்.
Friday, 25 January 2013
Sunday, 13 January 2013
புத்தாண்டு பந்தாட்டம்
புத்தாண்டு கொண்டாட்டத்தில் இவ்வளவு குழப்பமா?? “சித்திரை-1” தான் தமிழ் புத்தாண்டு என நாம் பிறந்தது முதல் இப்போது வரை கொண்டாடி வருகின்றோம். திடீர் என்று “தை-1” தான் தமிழ் புத்தாண்டு என ஒரு சாரார் சொல்கின்றனர். ஏன் இப்படி குழப்பம் பிறப்பிக்கின்றனர்? தமக்கான புத்தாண்டினை கூட அந்த இனம் குழப்பத்துடன் கொண்டாடுவது எவ்வளவு வேதனையானது. இந்த குழப்பம் தமிழர்க்கு மட்டும்தானா??
சற்று வரலாற்றினை திரும்பி பார்த்தால் இந்த குழப்பம் தமிழ் இனத்திற்கு மட்டும் ஏற்பட்டது அல்ல என்பது புரியும்.
Wednesday, 9 January 2013
பசுமைநடை - கீழக்குயில்குடி

ரம்மியமான கிராமத்தின்
அமைதியை ஆங்காங்கே குயில்களும் சிறு பறவைகளும் சலனப்படுத்திக் கொண்டிருந்த அதிகாலைப்
பொழுதினில் மலை அடிவாரத்தில் பசுமைநடை நண்பர்கள் கூடினோம்.
Saturday, 5 January 2013
பசுமைநடை - கிடாரிப்பட்டி
22-04-2012. உண்மையில்
என் வாழ்வில் மறக்க முடியாத தினம். முதன் முறையாக பசுமைநடையில் இணைந்து வரலாற்றினை
தேடி நடக்க துவங்கிய தினம். முதல் நடை, புதுமுகங்களாக இருக்கப்போகின்றார்கள் என நினைத்த
எனக்கு ஏமாற்றமே.. திருமங்கலத்தில் இருந்து நிறைய நண்பர்களின் தோழமை கிடைக்க காரணமாக
இருந்தது இந்த தினம். இனம் இனத்தோடுதான் சேரும் என்ற பழமொழிக்கு அன்றுதான் அர்த்தம்
விளங்கியது. திருமங்கலத்தில் இருந்து என் இரு சக்கர வாகனத்தினை எடுத்து தனியாக கிளம்பிய
எனக்கு மதுரை புதூரில் இவ்வளவு நண்பர்கள் கிடைப்பார்கள் என்று எதிர் பார்க்கவே இல்லை.
மதுரை புதூரில்
இருந்து பசுமைநடை குழுவினரோடு இணைந்து அழகர் கோவிலை நோக்கி எனது வாகனத்தில் பயணமானேன்.
அழகர் கோவில் முதல் தோரணவாயிலின் முன்புறம் திடீரென அனைத்து வாகனங்களும் நின்றது. எதற்காக
என சிந்தித்துக்கொண்டிருக்கும் போதே
Friday, 4 January 2013
பசுமைநடை – அறிமுகம்

Subscribe to:
Posts (Atom)