Tuesday, 11 December 2012
Sunday, 2 December 2012
மரணமடையும் மனிதம்
“கொலை செய்தால் கொலைதான்
தண்டணை என்றால்- தண்டனையாக கொடுக்கப்பட்ட கொலைக்கு என்னதான் தண்டணை? #தூக்கினை தூக்கில் ஏற்றுங்கள்.” –இது நான் காசாப் மரண
தண்டனை நிறைவேற்றப்பட்ட அன்று என் நண்பர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி. ஏகப்பட்ட
எதிர்ப்பு குறுஞ்செய்திகள் என் அலைபேசியில் வந்து குவிந்துவிட்டன. “160 மனிதர்களை
கொன்று குவித்தவனை மன்னித்து விட சொல்கின்றாயா?” என்றும்- “ அவனை உயிரோடு விட்டால்
இன்னும் பல மனித உயிர்கள் அவனால் பலியாகும்” என்றும்- நீ என்ன அந்த தீவிரவாத
இயக்கத்தில் சேர்ந்துவிட்டாயா?” என்றும் மாறி மாறி கேள்விகள். நானும் எனக்கான
பதிலை கூறாமல் இல்லை. அவர்கள் எனது விளக்கத்தினை ஏற்க கூடிய மன நிலையிலும் இல்லை.
இதோ இப்போது இதனை படித்துக்கொண்டிருக்கும் உங்களில் பெரும்பாலானோர் என்
விளக்கத்தினை ஏற்றுக்கொள்வது கடினம் என்பதும் கூட எனக்குத் தெரியும்.
Friday, 9 November 2012
சாட்டை - கலைப்பார்வை

Friday, 2 November 2012
கும்பாபிஷேகம் எதற்காக??
நமக்கு நமது அப்பாவின் பெயர்
தெரிந்திருக்கும். அப்பாவினுடைய அப்பாவின் பெயரும் கூட ஓரளவுக்கு
தெரிந்திருக்கும். அவருடைய அப்பாவின் பெயரோ, அவரது பாட்டையாவின் பெயரோ நம்மில்
எத்தனை பேருக்கு தெரியும்??
சுமார் நூறு ஆண்டுகளுக்கு
முன் எனது அப்பாவை பெற்ற அப்பாவினுடைய பாட்டையா, நாங்கள் இப்போது குடியிருக்கும் ஓட்டு
திண்ணை வீட்டினை கிரயத்திற்கு வாங்கியுள்ளார். அந்த கிரய பத்திரங்களை எங்கள் வீட்டின்
வயது முதிந்தவர்களின் உதவியுடன் படிக்கும் போது ஏழு தலைமுறையினரின் பெயர்களையும்
இப்போது அவர்களின் சந்ததிகள் எங்கெல்லாம் பிரிந்து பரவி வாழ்கின்றார்கள்
என்பதையும் அறிந்து கொண்டேன். உண்மையில் வரலாறு என்பது தேடும்போதும் சரி அதனை
அறிந்து கொள்ளும் போதும் சரி ஒரு இனம் புரியாத ஆர்வமும் மகிழ்ச்சியும் மனதை
கவ்விக்கொள்கின்றது.
Friday, 26 October 2012
பெண்கள் மத்தியில் பெண்ணியம்...
சமையலறைக்கு வாக்கப்பட்ட
பெண்கள்- இப்போது அந்த சமையலறையை விவாகரத்து செய்ய துவங்கி வருகின்றனர். இது
சரியா? தவறா? சரி என்றால்- யார்தான்
அடுத்து சமைப்பது? தவறென்றால்- ஏன் ஆண்களும் சமைக்க கூடாது? அது
பெண்ணுக்கென ஒதுக்கப்பட்ட பகுதியா? இல்லை சமையல் செய்வதுதான் பெண்களின் தொழிலா? வீட்டு
வேலைகளை பெண்கள்தான் செய்ய வேண்டுமா? கட்டிலறையும்- சமையலறையும் மட்டும் தான்
பெண்களுக்கானதா?
இதைப்படித்ததும் இது என்ன முட்டாள்தனமான
கேள்வியாக இருக்கின்றது என்றோ? இந்த கேள்விகளுக்கான எதிர்ப்பு பதில்களை உங்கள்
மனம் தேட துவங்கியிருந்தாலோ- நீங்களும் ஒரு ஆணாதிக்கவாதி என்பதனை ஏற்றாக வேண்டும்.
பெண்ணியம், பெண் சுதந்திரம் குறித்த கருத்துகள் மேலோங்கி இருக்கும் இந்த காலகட்டத்தில் உண்மையில் பெண்கள் பெண்ணியம் குறித்து புரிதலில் இருக்கின்றனரா? பெண் சுதந்திரம் பெண்களிடம் எந்த அளவில் சென்றடைந்துள்ளது? இந்த கேள்விகளுக்கான பதில்களை ஒரு சிறு கள ஆய்வு மூலம் அறிந்து கொள்ள நினைத்தேன்.
Wednesday, 17 October 2012
காணாமல் போன மின்சாரம்...
என் சிறுவயதில் எப்பொழுதாவது
இரவு நேரங்களில் எங்கள் தெருவில் மின் தடை ஏற்படும். மின் தடையானாலும் சரி மின்
தடை நீங்கி வெளிச்சம் வந்தாலும் சரி ஒரு பேரிறைசலால் அந்த நொடியில் தெருவே அலரும்.
அந்த இனிமையான பேரிறைச்சலையோ, இருளில் விளையாடும் ஐஸ் விளையாட்டினையோ, இப்போதைய
வாண்டு பட்டாளங்களிடம் காண்பது அரிதாகிப்போனது. நம் குழந்தைகளின் சுதந்திரம்
பரிபோனது ஒரு காரணமாக இருந்தாலும் எப்பொழுதாவது மின் தடை ஆனால் தானே!! அதில் ஒரு எதிர்பார்ப்பு
இருக்கும். எப்பொழுதுமே இதே நிலையாய் இருந்தால் எதிர்ப்புதானே வரும், வாண்டுகளுக்குமே.
Saturday, 29 September 2012
சக்கையானாலும் சகித்துக்கொள்...

Friday, 7 September 2012
உயிர் பெற்ற இருபது சடலங்கள்...

Saturday, 25 August 2012
பசி, தாகம் - விற்பனைக்கு

Tuesday, 14 August 2012
வாழிய சுதந்திர இந்தியா!!!

Tuesday, 7 August 2012
யார் மனிதன் ?
கண்மாய்க்குள் குடியேறி வெள்ளம் வீட்டினுல் புகுந்ததாக ஒப்பாரிப்பவனும்;
காடுகளை அழித்து குடியேறி யானைகள் அட்டூளியம் என புலம்புபவனும்;
மரங்களை வெட்டி சாலை அமைத்து மழை பொய்த்தாய் பொய்யுறைப்பவனும்;
விவசாய நிலத்தில் எல்லாம் வீடு கட்டி ஒரு வாய் சோத்துக்கு அலையப்போகின்றவனும் தான் - இக்காலத்தில் மனிதன்.
விவசாய நிலத்தில் எல்லாம் வீடு கட்டி ஒரு வாய் சோத்துக்கு அலையப்போகின்றவனும் தான் - இக்காலத்தில் மனிதன்.
Tuesday, 31 July 2012
ஆரியன் திருடிய, தமிழர் பண்பாடு...

Thursday, 12 July 2012
தமிழா, முன்னேறு தமிழோடு...

தாய் மொழியையும் நேசிக்கமாட்டான்..
நம் பழந்தமிழர்கள் பயன்படுத்திய தமிழர் வாழ்வியல் முறைகளை நாம் பின்பற்றினால் போதும் நமக்கான வளர்ச்சியும், இன்பமும் என்றும் நம்முடன் இருக்கும். இயற்க்கையை நேசித்த நம் பாட்டனார்கள், மரங்களை பாதுகாத்து காட்டிலேயே வாழ்க்கை நடத்தியுள்ளனர். காட்டில் கிடைக்கும் காய் கனிகளை உண்டும், மூலிகைகளை பயன்படுத்தி நோய் நீக்கியும், இனிய காற்றினை சுவாசித்தும் வாழ்ந்துள்ளனர்.
Friday, 29 June 2012
ஆரிய கைப்பிள்ளை திராவிடம்
உலகின் முதல் மனித உயிரும் முதல் இனிய மொழியும் உண்டான குமரிக்கண்டத்தினை பற்றி அறிந்து கொண்ட நாட்களில் இருந்து நானும் ஒரு தமிழன் என்ற கர்வம் என்னுள் அரும்பு விட்டு கிளைகளாக வளரத்துவங்கிவிட்டது.
குமரிக்கண்டம். குமரி என்றால் சோற்றுக்கற்றாழை என்று நாம் நாட்டுப்புறத்தில் மக்கள் சொல்லக்கூடிய ஒரு மூலிகைச்செடி. குமரிச்செடி மிகுந்து காணப்பட்டதால் குமரிக்கண்டம் என்ற காரணப்பெயரை நம் முன்னோர்கள் சூட்டியுள்ளனர். இதனை இலெமூரி கண்டம் என்றும் அழைத்துள்ளனர். மூலிகை இலை நிறைந்து காணப்பட்டதே இந்த காரணப்பெயருக்கும் காரணம்.
இலை மூலிகை - இலைமூலி - இலைமூரி - இலெமூரி - இலெமுரிய என வழக்காகிப்போனது.
குமரிக்கண்டம். குமரி என்றால் சோற்றுக்கற்றாழை என்று நாம் நாட்டுப்புறத்தில் மக்கள் சொல்லக்கூடிய ஒரு மூலிகைச்செடி. குமரிச்செடி மிகுந்து காணப்பட்டதால் குமரிக்கண்டம் என்ற காரணப்பெயரை நம் முன்னோர்கள் சூட்டியுள்ளனர். இதனை இலெமூரி கண்டம் என்றும் அழைத்துள்ளனர். மூலிகை இலை நிறைந்து காணப்பட்டதே இந்த காரணப்பெயருக்கும் காரணம்.
இலை மூலிகை - இலைமூலி - இலைமூரி - இலெமூரி - இலெமுரிய என வழக்காகிப்போனது.
Friday, 22 June 2012
ஆரிய வலையில் தமிழ் மீன்

தமிழே ஞாலத்தின்(உலகின்) முதன் மொழி, அதேபோல தமிழனே ஞாலத்தில் முதல் மாந்தன்(மனிதன்) என்று தமிழ் ஆர்வளர்கள் மட்டுமல்ல மொழி ஆய்வாளர்களும் அறிஞர்களும் சொல்லியும் எழுதியும் உள்ளதன் காரணம் தமிழர்களாகிய நாம் நமது வரலாற்றினை தெரிந்து கொள்வதற்கு மட்டுமல்ல, நமது தமிழ் பரம்பரைக்கும் நமது வரலாற்றினை பிழையின்றி கொண்டு சேர்க்கவுமே.
அதன்படி தமிழறிஞர்.திரு.தேவநேய பாவணர் அவர்களின் தமிழ் ஆய்வுகள் என்னை மிகவும் பாதித்தது. அவருடைய ஆய்வுகளோடு என் ஆதங்கங்களை எழுத்தில் சேர்த்துள்ளேன்.
Friday, 15 June 2012
மதுரையில் கண்மாயை காணவில்லை

Monday, 11 June 2012
நவீன ஆண்
சிறைச்சாலை போல எங்கு திரும்பினாலும் பழுப்பு நிறத்தில் அழுக்கேறிப்போய் கிடக்கும் சுவர். அங்கும் இங்கும் எங்கு திரும்பினாலும் ஏழைகளே இருக்கிறார்கள் உண்டியல் வருமானத்தில் பிழைத்துவரும் கோவில்களில் இருப்பதை போல. மண் தரையோ சிமென்ட் தரையோ துண்டை விரித்து படுத்து கிடக்கும் சொந்த பந்தங்கள். மாத்திரைகளை தவிர அந்த பகுதி முழுவதும் மருந்து நாற்றம். உள்ளே வந்தாலே போதும் குணமாக்கிவிடும் அந்த மருந்து நாற்றம் நம் அரசு மருத்துவ மனைகளை தவிர வேறெங்கு சென்றாலும் கிடைக்காத
அரிய பொக்கிஷம்.
Friday, 8 June 2012
குடிமகன்
இப்போது குடிமகன் என்றாலே மதுவிற்க்கு அடிமையான மனிதனை சித்தரிக்கும் கேலிச்சொல்லாகிபோனது.
குடியால் குடல் வெந்து இறந்தவர்களை கண்டுள்ளேன். குடியால் தங்கும் குடிசை இழந்தவர்களையும் கண்டுள்ளேன். குடியால் ஆடை இழந்து தெருவில் கிடப்பவர்களை மட்டுமே என்னால் படமாக்க முடிந்தது.
குடல் வெந்து இறந்தவர்களையோ குடிசை இழந்து தவிப்பவர்களையோ படமாக எடுக்க முடியவில்லை. அவர்களை பாடமாகவே படிக்க முடியும்.
Thursday, 7 June 2012
என் மண்ணின் அவல அறிமுகம்:
முதலில் எனது அறிமுகத்தினை விட, நான் பிறந்த மண்ணின் அறிமுகம் தான் இப்போதைக்கு முதல் தேவை...
திருமங்கலம் எனது பிறப்பிடம்.
எனது ஊரை பற்றி உங்களுக்கு தெரிந்தது
1. தமிழ் ஈழ விடுதலை புலிகளை ஆதரித்து திருமங்கல மேடையில் முழங்கியதற்க்காக திரு.வைகோ அவர்கள் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டது,
2. தீவிரவாதி என்று கைது செய்யப்பட்ட இமாம்அலி என்பவர் தப்பிசென்ற ஊர்.
3. இடைத்தேர்தலில் வாக்குறிமையை மூவாயிரம் ரூபாய்க்கும், பிரியாணி பொட்டலங்களுக்கும் விற்ற மக்கள் வாழும் மண்.
2. தீவிரவாதி என்று கைது செய்யப்பட்ட இமாம்அலி என்பவர் தப்பிசென்ற ஊர்.
3. இடைத்தேர்தலில் வாக்குறிமையை மூவாயிரம் ரூபாய்க்கும், பிரியாணி பொட்டலங்களுக்கும் விற்ற மக்கள் வாழும் மண்.
இதுதான் உங்களுக்கு தெரியும்.
Subscribe to:
Posts (Atom)