Saturday 29 September 2012

சக்கையானாலும் சகித்துக்கொள்...

நான் மதுரைக்கு செல்லும் பொழுதெல்லாம்  அதிகமான சமயங்களில் காளி மார்க், பவண்டோ விரும்பி அருந்துவது வாடிக்கை. கோடை காலத்தில் என் பிரத்யோக பானம் கரும்பு சாறு. நாம் போய் கேட்டவுடன் நாமக்காக சீவி சிங்காரித்து இருக்கும் கரும்பினை, கரும்பு ஆட்டும் இயந்திரத்தில் இரு இரும்பு உருளைகளுக்கு நடுவில் விட்டு பிழிந்தெடுத்து சாறு சேகரிப்பார்கள் அப்படி சேகரிக்கும் போது ஒரு முறையோடு நிறுத்திவிடாமல் சுமார் நான்கு ஐந்து முறையும், நீர் சத்து அதிகம் உள்ள கரும்பு எனில் அதற்கும் மேல் அதனை (ஆட்டி) பிழிந்து எடுத்துவிடுவார்கள். ஒவ்வொரு முறையும் அந்த  கரும்பு இரு உருளைகளுக்கு நடுவில் தலையை விட்டு வெளியே சக்கையாகி வரும் போது அவ்வளவு தானோ என மனம் நினைக்கும் ஆனாலும் மறுபடி மறுபடி அதை திணித்து எடுக்கும் போதும் அதிலிருந்து சாறு கொட்டிய வண்ணமே இருக்கும். நாம் கொடுக்கும் விலைக்கான சாற்றினை கண்ணாடி குவளையில் எப்படியோ பிழிந்து நிறைத்து கொடுத்துவிடுகிறார்கள்.

Friday 7 September 2012

உயிர் பெற்ற இருபது சடலங்கள்...

          தீபாவளி என்பது தமிழனுக்கான பண்டிகை கிடையாது. ஆனால் திபாவளிக்கு கொளுத்தி மகிழும்  பட்டாசு, வான வேடிக்கை, மத்தாப்பு போன்றவற்றை தொண்ணுறு விழுக்காடு இந்தியாவுக்கு வழங்குவது தமிழகம் மட்டுமே. குறிப்பாக கரிசல் காட்டு மண் சிவகாசி தான் இதன் மூலதனம். ஒவ்வொரு தீபாவளிக்கும் இந்தியர்கள் தங்கள் மகிழ்ச்சியையும் தங்களது தகுதியையும் காட்ட பயன்படுத்துவது இந்த பட்டாசுகளை தான். ஆரம்ப காலத்தில் சப்த்தம் அதிகமான பட்டாசுகள் தான் பணம் படைத்தவர்களால் விரும்பப்பட்டு வந்தது. அதனை கண்டு இல்லாதோரும் தங்கள் குறைந்த பண சக்திக்கு தக்க தன் பிள்ளைகளுக்கு குறைந்த சப்த்தம் வரக்கொடிய ஓலை வெடி, வரி வெடி, சீனி வெடி எனப்படும் பிஜிலி வெடி போன்றவற்றை வாங்கி கொடுத்து இல்லாத இன்பத்தை இதில் தேடினர்.