Friday 29 June 2012

ஆரிய கைப்பிள்ளை திராவிடம்


                   உலகின் முதல் மனித உயிரும் முதல் இனிய மொழியும் உண்டான குமரிக்கண்டத்தினை பற்றி அறிந்து கொண்ட நாட்களில் இருந்து நானும் ஒரு தமிழன் என்ற கர்வம் என்னுள் அரும்பு விட்டு கிளைகளாக வளரத்துவங்கிவிட்டது.
குமரிக்கண்டம். குமரி என்றால் சோற்றுக்கற்றாழை என்று நாம் நாட்டுப்புறத்தில் மக்கள் சொல்லக்கூடிய ஒரு மூலிகைச்செடி. குமரிச்செடி மிகுந்து காணப்பட்டதால் குமரிக்கண்டம் என்ற காரணப்பெயரை நம் முன்னோர்கள் சூட்டியுள்ளனர். இதனை இலெமூரி கண்டம் என்றும் அழைத்துள்ளனர். மூலிகை இலை நிறைந்து காணப்பட்டதே இந்த காரணப்பெயருக்கும் காரணம்.
 இலை மூலிகை - இலைமூலி - இலைமூரி - இலெமூரி - இலெமுரிய என வழக்காகிப்போனது.

Friday 22 June 2012

ஆரிய வலையில் தமிழ் மீன்


தமிழே ஞாலத்தின்(உலகின்) முதன் மொழி, அதேபோல தமிழனே ஞாலத்தில் முதல் மாந்தன்(மனிதன்) என்று தமிழ் ஆர்வளர்கள் மட்டுமல்ல மொழி ஆய்வாளர்களும் அறிஞர்களும் சொல்லியும் எழுதியும் உள்ளதன் காரணம் தமிழர்களாகிய நாம் நமது வரலாற்றினை தெரிந்து கொள்வதற்கு மட்டுமல்ல, நமது தமிழ் பரம்பரைக்கும் நமது வரலாற்றினை பிழையின்றி கொண்டு சேர்க்கவுமே.

அதன்படி தமிழறிஞர்.திரு.தேவநேய பாவணர் அவர்களின் தமிழ் ஆய்வுகள் என்னை மிகவும் பாதித்தது. அவருடைய ஆய்வுகளோடு என் ஆதங்கங்களை  எழுத்தில் சேர்த்துள்ளேன்.

Friday 15 June 2012

மதுரையில் கண்மாயை காணவில்லை


             தண்ணீர், உயிர் வாழ்வதற்கான சொத்து.நீருக்காக உலக அரங்கில் போராட்டம் மூளும் இத்தருணத்தில் அதன் முக்கியத்துவம் குறித்து உணரவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கின்றோம். இன்னும் நாம் உணராதிருந்தால் இன்னொரு இருநூறு ஆண்டுகளில் மனித இனம் மாத்திரமல்ல, எந்த உயிரினமும் இப்புவியில் வாழ்வது அரிது. நம் முன்னோர்கள் செய்த தவறால் நாம் இப்படி சிக்கி தவிக்கின்றோம். இதே தவறை நாமும் செய்து நம் சந்ததிகளுக்கு வேதனை ஏற்ப்படுத்த வேண்டாம். இந்த நேரத்தில் அதே முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற பல நல்ல செயல்களையும் நாம் தொடர வேண்டும். அவர்கள் செய்த அந்த நல்ல செயல்களாலேயே, நாம் இன்று வரை உடலில் உயிர் பிடித்து வாழ்கிறோம்.

Monday 11 June 2012

நவீன ஆண்



சிறைச்சாலை போல எங்கு திரும்பினாலும் பழுப்பு நிறத்தில் அழுக்கேறிப்போய் கிடக்கும் சுவர். அங்கும் இங்கும் எங்கு திரும்பினாலும் ஏழைகளே இருக்கிறார்கள் உண்டியல் வருமானத்தில் பிழைத்துவரும் கோவில்களில் இருப்பதை போல. மண் தரையோ சிமென்ட் தரையோ துண்டை விரித்து படுத்து கிடக்கும் சொந்த பந்தங்கள். மாத்திரைகளை தவிர அந்த பகுதி முழுவதும் மருந்து நாற்றம். உள்ளே வந்தாலே போதும் குணமாக்கிவிடும் அந்த மருந்து நாற்றம் நம் அரசு மருத்துவ மனைகளை தவிர வேறெங்கு சென்றாலும் கிடைக்காத  அரிய  பொக்கிஷம்.

விவசாயம் விற்ப்பனைக்கு

விளை நிலங்கள் அனைத்தும் விலை நிலங்கள் ஆனது..
ஆற்று பாசனம் பக்கத்து மாநிலத்தினால் தடைபட்டு போனது..


மலை நீர்தான் கிடைக்கவில்லை, மழை நீராவது கிடைக்குமா??
பெய்யும் மழை நீரை தேக்கி வைக்கும் கண்மாய், ஊரணிகளில் மனித  குடியேற்றம்..
அவர்களுக்கு என்னவோ வெள்ள நிவாரண நிதி காத்திருக்கிறது..

Friday 8 June 2012

குடிமகன்

"குடிமகன்" என்ற சொல் நாட்டின் பிரஜை என்ற அர்த்தத்தினை உடைத்து வெகு காலங்கள் ஆகிப்போனது. 
இப்போது குடிமகன் என்றாலே மதுவிற்க்கு அடிமையான மனிதனை சித்தரிக்கும் கேலிச்சொல்லாகிபோனது.

குடியால் குடல் வெந்து இறந்தவர்களை கண்டுள்ளேன். குடியால் தங்கும் குடிசை இழந்தவர்களையும் கண்டுள்ளேன். குடியால் ஆடை இழந்து தெருவில் கிடப்பவர்களை மட்டுமே என்னால் படமாக்க முடிந்தது.
குடல் வெந்து இறந்தவர்களையோ குடிசை இழந்து தவிப்பவர்களையோ படமாக எடுக்க முடியவில்லை. அவர்களை பாடமாகவே படிக்க முடியும்.

Thursday 7 June 2012

என் மண்ணின் அவல அறிமுகம்:

முதலில் எனது அறிமுகத்தினை விட, நான் பிறந்த மண்ணின் அறிமுகம் தான் இப்போதைக்கு முதல் தேவை...

திருமங்கலம் எனது பிறப்பிடம்.

எனது ஊரை பற்றி உங்களுக்கு தெரிந்தது


1. தமிழ் ஈழ விடுதலை புலிகளை ஆதரித்து திருமங்கல மேடையில் முழங்கியதற்க்காக திரு.வைகோ அவர்கள் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டது,
2. தீவிரவாதி என்று கைது செய்யப்பட்ட இமாம்அலி என்பவர் தப்பிசென்ற ஊர்.
3. இடைத்தேர்தலில் வாக்குறிமையை மூவாயிரம் ரூபாய்க்கும், பிரியாணி பொட்டலங்களுக்கும் விற்ற மக்கள் வாழும் மண்.
இதுதான் உங்களுக்கு தெரியும்.