எங்கோ நின்று கொண்டிருக்கிறேன்.
நான் ரசிக்கும் கமலஹாசன் என்னை கொஞ்சம் விலகி நிற்கச் சொல்லிவிட்டு, எனது காலுக்கிடையில்
கிடந்த இலைதழைகளை தன் கையில் இருக்கும் துடைப்பம் கொண்டு தள்ளிக்கொண்டே எங்கோ போகிறார்.
சட்டென விழித்துக் கொள்கிறேன். படுக்கையில் இருந்து என்னை எழுப்பிவிடுகிறது சூரிய ஒளிக்கதிர்.
கண்கள் கூச செய்தித்தாளுக்காக
வீதிக்கு வருகிறேன். எந்த பக்கம் போகலாமென சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.