Thursday 12 July 2012

தமிழா, முன்னேறு தமிழோடு...

தாயை நேசிக்காதவனே,
தாய் மொழியையும் நேசிக்கமாட்டான்..

நம் பழந்தமிழர்கள் பயன்படுத்திய தமிழர் வாழ்வியல் முறைகளை நாம் பின்பற்றினால் போதும் நமக்கான வளர்ச்சியும், இன்பமும் என்றும் நம்முடன் இருக்கும். இயற்க்கையை நேசித்த நம் பாட்டனார்கள், மரங்களை பாதுகாத்து காட்டிலேயே வாழ்க்கை நடத்தியுள்ளனர். காட்டில் கிடைக்கும் காய் கனிகளை உண்டும், மூலிகைகளை பயன்படுத்தி நோய் நீக்கியும், இனிய காற்றினை சுவாசித்தும் வாழ்ந்துள்ளனர்.

அவர்கள் பயன்படுத்திய பெயர்கள் அனைத்தும் எப்படி காரண பெயர்களாக இருந்தனவோ அதே போல அவர்கள் எழுத்துகளை பயன்படுத்த துவங்கும் முன் ஓவியங்களால் அவர்களின் எண்ணங்களை வெளிப்படுத்தயுள்ளனர். அவர்களின் சிறிய எண்ணங்களை கூட சற்றே பெரிய ஓவியங்களால்  வெளிப்படுத்த வேண்டிய நிலையில் அந்த ஓவியங்களின் அளவை சற்று குறைத்து படிப்படியாக குறிகளாக எழுத்துகளை பரிணாமம் அடைய செய்துள்ளனர். ஒவ்வொரு வகை  எண்ணத்திற்கும் ஒவ்வொரு வகை குறிகளை பயன்படுத்துகையில் முன்பை விட வேகமாகவும் புரிந்துகொள்ளும்படியும் இருந்துள்ளது. அந்த தொடர் குறிகளே எழுத்தாக பரிணமித்துள்ளது.. 


நம் தமிழ் பெயர்கள் அனைத்தும் எப்படி காரண பெயர்களோ அதே போல நமது தமிழ் எழுத்துகளும் காரண எழுத்துகளே. நம் மொழியின் தொன்மையும், அருமையும் உணர்ந்திருந்தாலே போதும் நம் தாயின் அருமை உணர்ந்த பிறகு நம் தாய் மீது கொண்ட நேசத்துக்கு இணையான நேசம் நம் மொழி மீது நமக்கு வரும்.


தமிழ் எழுத்துகளையும், தமிழ் பெயர்களையும் பயன் படுத்த துவங்குவோம். உலகின் முதல் மொழி, திராவிட மொழிகளுக்கு தாய், ஆரிய மற்றும் வட மொழிகளுக்கு வழிகாட்டி, பெரும்பாலான இந்திய மொழிகளுக்கு வடிவம் கொடுத்த மொழி நம் தமிழ். ஆனால் அதிகமான மாந்தர்களால் பயன் படுத்த படாததற்கு என்ன காரணம்? தயவு செய்து சிந்திப்போம். தமிழை பிழையின்றி பேசுவோம், எழுதுவோம், பயன்படுத்துவோம், நம் மொழி அருமை உலகுக்கு தானாக வெளிப்படும்.


அதற்க்கு நாம் முதலில் நாம் பயன்படுத்தும் பிறமொழி சொல்களை அடையாளம் காண்போம்.


தமிழ் மாதங்கள் - ஆரிய மாதங்கள் 
சுறவம் - தை 
கும்பம்  - மாசி 
மீனம் - பங்குனி 
மேழம் - சித்திரை 
விடை - வைகாசி 
ஆடவை - ஆனி 
கடகம்  - ஆடி 
மடங்கல் - ஆவணி 
கன்னி  - புரட்டாசி 
துலை - ஐப்பசி 
நளி - கார்த்திகை 
சிலை - மார்கழி 


தமிழ் கிழமைகள் 
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
அறிவன்
வியாழன்
வெள்ளி
காரி

தமிழ் எண்கள் 
௧ - 1
௨ - 2
௩ - 3
௪ - 4
௫ - 5
௬ - 6
௭ - 7
௮ - 8
௯ - 9
௧௦0 - 10
இன்னும் இதுபோல எத்தனை எத்தனையோ தமிழ் வழக்குகள் அந்நிய மோகத்தால் பயன்படுத்தபடாமல் தூக்கி போட்டுவிட்டோம். இனியாவது நம் தாய்க்கு இணையான நம் தாய் மொழிக்கு மதிப்பளிப்போம். 


அந்நியருடன் பேச அவரது மொழியை கற்றுக்கொள்வது தவறு இல்லை. அதே போல அந்நியன் நம்முடன் பேச நம் மொழியை அவன் கற்றுக்கொள்ளும் நிலையை கொண்டுவருவது நம் கைகளிலும் மனத்திலும் மட்டுமே உண்டு.





படைப்பு :
சு.ரகுநாத் 
thamizhmani2012@gmail.com 

4 comments:

  1. பாராட்டுக்கள். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் "வந்தவர் மொழியா செந்தமிழ்ச் செல்வமா" என்று அவர் நடத்திய "குயில்" இதழில் எழுதி வந்தார். முடிந்தால் அதைப் பதிவுகளாகப் போட வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக தோழரே.. உங்களின் வழிகாட்டுதல்களுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.. குயில் இதழ்களை தேடி கொண்டுவந்திடுகிறேன் விரைவில். நன்றி

      Delete
  2. நிச்சயம் முன்னேற்றுனோம் தமிழை... முன்னேறுவோம் தமிழோடு.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழரே, தமிழோடு முன்னேறுவோம்.. நன்றி..

      Delete