Tuesday 31 July 2012

ஆரியன் திருடிய, தமிழர் பண்பாடு...

          நாம் இப்போது பயன்படுத்தும் வட(ஆரிய) மொழி கலப்பு வார்த்தைகள் எப்படி தமிழ் மொழியை அசிங்கம் செய்கின்றனவோ, அதே போல நமது பல்வேறு கலாச்சாரங்களும் பண்பாடுகளும் ஆரிய கலப்பால் கேளிக்கூத்தாகின்றது. ஆதியில் நாம் பின்பற்றிய பழக்கங்கள் அனைத்துக்குமே ஒவ்வொரு காரண காரியம் உண்டு. மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்ததில் இருந்து ஆடை அணியும் முறை வரை அனைத்துமே நமது தட்ப வேட்ப நிலையை கருத்தில் கொண்டும் நாம் வாழும் பகுதிக்கு ஏற்றார்ப்போல் வாழ்க்கை முறையை வகுத்து வாழ்ந்துள்ளோம். நாம் பின்பற்றிய வாழ்வியல் முறைகளை ஆரியன் அவனது கவர்ச்சியை புகுத்தி அதன் மயக்கத்தில் நம்மை கிடத்தி பின் நமக்குள் பயத்தினை உண்டுபண்ணி நமக்கான வாழ்வியல் முறையையே அவனுடைய பிழைப்புக்கான சூத்திரத்தினையும் சேர்த்து நம்மிடமே கொண்டுவந்து மூடனாக்கிவிட்டான். ஒரு சில விடயங்களை பற்றி மட்டும் இப்போதைக்கு இங்கு எழுதியுள்ளேன்.


குலதெய்வ வழிபாட்டில் ஆரியன் :


          குமரிக்கண்டத்தில் ஏற்பட்ட கடல்கோளுக்கு தப்பி பிழைக்க சிறு சிறு குழுவாக தெற்கில் இருந்து இடம் பெயர்ந்த பழந்தமிழர்கள், வருகிற வழிகளில் ஆங்காங்கே ஆற்று படுகைகளில் வாழ்ந்த காலகட்டத்தில் தான் இந்த குல தெய்வ வழிபாட்டு முறை தோன்றி இருக்க வேண்டும். ஒவ்வொரு சிறு குழுவிற்கும் தலைமை ஏற்று நடத்திய அந்த குழுத்தலைவர்கள் இறந்த பிறகு அவர்களுக்கு நடுகல் நட்டு அங்கேயே சிறுது காலமா தங்கியும் உள்ளனர். பின் வறட்சி காலங்களில் மீண்டும் அவர்களின் பயணம் நீர் நிலைகளையும், வெள்ளெமை நிலங்களையும் நொக்கி நகர்ந்துள்ளது. அப்போது ஒரு சில குழுக்கள் அவர்களுக்கு வாழ்வளித்த பழைய மண்ணின் உள்ள பற்றாளும் இறந்த தலைவர்களின் நினைவுகளுக்காகவும் அவர்கள் வாழ்ந்த மண்ணை எடுத்து வந்து தாங்கள் இடம் பெயர்ந்த இடத்தில் அதனை பத்திரபடுத்தி வாழ்ந்து வந்துள்ளனர். காலப்போக்கில் அந்த பிடி மண்ணுக்கு மரியாதை செய்ய துவங்கியவர்கள் ஆரிய கலாச்சாரம் புகுந்த பின் அவர்கள் அந்த பிடி மண்ணினையும் தெற்கில் உள்ள முன்னோர்களின் நடுகல்லையும் கடவுளாக்கி வழிபடத்துவங்கியுள்ளனர். ஆரிய ஆக்கிரமிப்பினால் அவன் உண்டு பண்ணிய சிவராத்திரி அன்று தமிழர்கள் தெற்கு நோக்கி பயணித்து அங்கு குலதெய்வ வழிபாடு செய்கின்றனர். இன்னும்
ஒரு சில தமிழ் குடி குல தெய்வ வழிபாடுகளை நடத்திட ஆரியனை அழைப்பது சிந்தித்தால் கேவலமானதே..



உயிர் உறுப்பினை கடவுளாக்கியது :

          ஆதியில் தமிழன் உயிர் வாழவைக்கும் காற்றினையும் நீரையும் நீரை பொழியக்கூடிய வானையும் அந்நீரை சேகரிக்கும் மண்ணையும் மிருகங்களிடம் இருந்து உயிர் காக்கும் நெருப்பினையும் எப்படி மதிப்பளித்து வாழ்ந்து வந்தானோ, அதே போலவே அந்த உயிர் உருவாக காரணமான ஆண் பெண் உயிர் உறுப்பு இணையும் அந்த செயலுக்கும் மதிப்பளித்துள்ளனர். அந்த இணையும் செயலை வடிமைத்தும் உள்ளனர். எதிர்கால சந்ததிகளுக்கு இதன் முக்கியத்துவத்தினை உணர்த்தவும் சந்ததிகளை பெருக்கவும் அவர்கள் எண்ணியிருக்கலாம். ஆனால் ஆரியன் இதனை நாம் மதிப்பதை கண்டு அந்த அமைப்பை வணங்க நமக்கு கற்றுக்கொடுத்து அதற்கு அவனே முன்னின்று பணிவிடை செய்ய வேண்டும் என்ற தோற்றத்தினை ஏற்படுத்தி நம்மை ஏமாற்றி பிழைத்துக்கொண்டுள்ளனர்



பூகோள அறிவினை மழுங்கடிக்கும் ஜாதகம் :

           சூரிய குடும் பத்தில் நீள் வட்ட பாதையில் சுற்றி வரக்கூடிய கோள்கள் மற்றும் துணைக் கோள்கள் பற்றிய பூகோள அறிவு பெற்றவர்களாக விளங்கியுள்ளனர் பழந்தமிழர்கள். கோள்கள் சுற்றிக்கொண்டே பூமியின் அருகாமையில் வருகையில் அதன் அதிர்வுகள் பூமியிலும் இங்கு வாழும் மனிதர்களிடமும் எப்படிபட்ட மாற்றங்களை உண்டுபண்ணும் என்பது போன்ற இந்த பூகோள அறிவியலையே ஆரியர்கள் அவர்களுடைய பிழைப்புக்காக அவர்களுக்கு சாதகமாக அதை ஜாதகமாக்கி தமிழர்களை ஏமாற்ற துவங்கினர்.


பழக்கங்கள் சடங்குகள் ஆனது :

          ஆரிய மொழியில் ஆடி மாதம் தமிழ் மொழியில் கடகம், இந்த மாதத்தில் பயிர் விதைப்பதன் காரணம் அடுத்து வரக்கூடிய மாதங்களில் கிடைக்கக்கூடிய மழையை பயன்படுத்தி விதை நல்ல முறையில் விளையும் என்ற விவசாய அறிவாகும் ஆனால் இதையும் ஆடி பதினெட்டாம் பெருக்கு என சொல்லி கோவில்களில் சிறப்பு வழிபாடு என்று சொல்லி பிழைப்பு நடத்துவதும் இதே ஆரியர்களே.


     இந்த விளைச்சளில் ஒரு பங்கு தன் குடும்பத்திற்கு எடுத்து வைத்துவிட்டு மற்றொரு பங்கினை வியபாரமும் செய்துள்ளனர். இதில் ஒரு முக்கியமான பங்கினை அடுத்த விளைச்சளுக்கு சேமித்தும் வைத்துள்ளனர். இந்த விதைகளின் விளையும் தன்மையை கண்டறிய கடகம் மாதத்திற்கு(ஆரிய மொழியில் ஆடி) முன் விடை மாதத்தில் (ஆரிய மொழியில் வைகாசி)  அந்த விதைகளை நீரிலும் இருளிலும் இட்டு விளைய வைத்து பரிசோதித்துள்ளனர். இதனை முளைப்பாரித் திருவிழா என சடங்காக மாற்றியவர்களும் இதே ஆரியர்கள்தான்.


          இதே போல ஒவ்வொரு செயல்களையும் ஏன் எதற்கு என ஆராய துவங்கினால் ஆரியன் நமக்கு செய்து கொண்டு இருக்கும் துரோகம் புரியும். எந்த ஒரு செயலையும் ஏன் என கேள்வி கேட்டு பழகுவோம், நம் பழந்தமிழர்களின் வாழ்க்கை முறையை மீட்டெடுப்போம்.


படைப்பு :
சு.ரகுநாத் 
thamizhmani2012@gmail.com 

2 comments:

  1. சிறப்பான எடுத்துக்காட்டுகளுடன் ஆரியதனமைக்குள் நாம்(தமிழர்கள்)எவ்வாறு மூழ்கியுள்ளோம் என்பதை விளக்குகிறது கட்டுரை. கண் விளிக்க வேண்டும் விரைவில் இருள் சூழ்ந்த மூடநம்பிக்கைகளில் இருந்து மீண்டு வர... இது போன்ற கட்டுரைகளை தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டும்... படித்துவிட்டு தெளிவு பெற வேண்டும்.

    ReplyDelete