Friday 29 June 2012

ஆரிய கைப்பிள்ளை திராவிடம்


                   உலகின் முதல் மனித உயிரும் முதல் இனிய மொழியும் உண்டான குமரிக்கண்டத்தினை பற்றி அறிந்து கொண்ட நாட்களில் இருந்து நானும் ஒரு தமிழன் என்ற கர்வம் என்னுள் அரும்பு விட்டு கிளைகளாக வளரத்துவங்கிவிட்டது.
குமரிக்கண்டம். குமரி என்றால் சோற்றுக்கற்றாழை என்று நாம் நாட்டுப்புறத்தில் மக்கள் சொல்லக்கூடிய ஒரு மூலிகைச்செடி. குமரிச்செடி மிகுந்து காணப்பட்டதால் குமரிக்கண்டம் என்ற காரணப்பெயரை நம் முன்னோர்கள் சூட்டியுள்ளனர். இதனை இலெமூரி கண்டம் என்றும் அழைத்துள்ளனர். மூலிகை இலை நிறைந்து காணப்பட்டதே இந்த காரணப்பெயருக்கும் காரணம்.
 இலை மூலிகை - இலைமூலி - இலைமூரி - இலெமூரி - இலெமுரிய என வழக்காகிப்போனது.



                        குமரிக்கண்டத்தின் வட கோடியில் குமரி ஆறு ஒடியது. தென்கோடியில் குமரிமலை அமைந்திருந்தது. அக்குமரி மலையில் இருந்து பஃறுளி எனும் ஆறு பாய்ந்து ஒடி அக்கால தென்மதுரையை வளமாக்கியுள்ளது. இது தான் நம் தமிழுக்கான விதை விழுந்த இடம். இன்று எத்தனையோ கிளைகளை விட்டு பரந்து கிடக்கும் இந்த விதையின் வரலாறும் மண்ணுக்குள் புதைந்துவிடக்கூடாது.
முதல் கடல்கோளில் பாண்டியனின் தலைநகரான தென்மதுரையும் நாட்டின் பெரும் பகுதியையும் விழுங்கிவிட்டது. அக்கடல்கோளுக்கு மக்களை காக்க எண்ணிய பாண்டிய மன்னன் ஒருவன் வடதிசையில் நகர்ந்து பனிமலையையும் கங்கை ஆற்றினையும் கண்டு அங்கு தன் மக்கள் இழந்த பகுதிகளுக்கு ஈடுகட்டிக்கொண்டான்.
இரண்டாம் கடல்கோள் வட பகுதியில் நெய்தல் நிலத்தினையும் விழுங்கி பசி ஆரியது. அப்போது தான் மீதமிருந்த குடிகளை பாண்டியன், சேர சோழ நாடுகளில் குடியமர்த்தினான்.
மூன்றாம் கடல்கோள் பசிதீர்ந்ததும் தாகம் தீர மீதமிருந்த குமரி ஆற்றினையும் குடித்து முடித்தது.
தொல்காப்பியர் வாழ்ந்த காலமான கிமு7ஆம் நுற்றாண்டு வரை தற்போதய வைகை மதுரை தோன்றவில்லை.

                              
                     கடல்கோளுக்கு தப்பி குமரிக்கண்ட தமிழர்கள் சில குழுக்களாக பிரிந்து வடக்கே இடம் பெயர்ந்து செல்ல செல்ல தட்ட வெட்ப நிலை வேறுபாட்டாலும் பலுக்கல் (உச்சரிப்பு) தவற்றாலும் அவர்கள் பேசிய மொழி மெல்ல மெல்ல திராவிடமானது. குமரி நாட்டு தமிழே திராவிட மொழிகளுக்கு தாயாகும். ஆரிய மொழிகட்க்கு மூலமாகும். மேற்கத்திய ஆரிய மொழிக்கு பல அடிப்படை சொற்களை வழங்கியிருப்பதும் அன்னை
தமிழ் மொழியே.
               தமிழ் என்னும் சொல்லுடன் அம் ஈறு பெற்று தமிழம் என்று வழங்குவது போலவே தெலுங்கம் கன்னடம் மலையாளம் என்று பேச்சிவழக்கில் வழங்குகிறோம்.

தமிழம் - த்ரமிழம் - திரமிடம் - திரவிடம் - திராவிடம் 
என திராவிடம் என்ற சொல் கூட தமிழில் இருந்து திரிந்ததுதான். திராவிட மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற எவற்றிற்க்கும் பண்டைய வரலாறுகளும் இலக்கியங்களும் தனிப்பட்ட முறையில் கிடையாது. அவர்கள் அவர்களது பண்டைய வரலாறுகளையும் இலக்கியங்களையும் அறிந்து கொள்ள தமிழுக்கே வந்தாக வேண்டும்.

திராவிட மொழிகளில் தமிழில் இருந்து முதலில் பிரிந்தது தெலுங்கு. கிபி7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரிலபட்டர் திராவிட மொழி குடும்த்தினை ஆந்த்ர-த்ராவிட பாஷா என்றார்.
வடுகு என தமிழர்களால் பொதுவாக குறிக்கப்பெறும் தெலுங்கு கிமு-வில் பல நூற்றாண்டுக்கு முன்பே தனி மொழியாக பிரிந்ததற்கான ஆதாரம்
"வடதிசை மருங்கின் வடுகுவரம் பாகத்
தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும்"
-சிறுகாக்கைப்பாடினியார் கூற்று.

"குல்லைக் கண்ணி வடுகர் முனையது
மொழிபெயர் தேஎத்த ராயினும்"
-மாமூலர் கூற்று.

அடுத்தது, சிலப்பதிகாரம் கருநாடகத்தினை கொடுந்தமிழ் நாடு போலவே குறித்திருக்கிறது.

"கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர்"
இளங்கோவடிகள் காலத்தில் கன்னடம் நடை மொழி வழக்கில் (பேச்சி வழக்கில்) மட்டும் இருந்ததை இதன் மூலம் அறிய முடிகிறது.

மலையாளம். கடைக்கழகக்காலத்தில் வேங்கடம் தமிழக வடக்கு எல்லையாக இருந்தது கூட மலையாளம் தமிழில் இருந்து பிரியாமல் இருந்ததினை வலியுறுத்தும்.

"வடகலை தென்கலை வடுகு கன்னடம்
இடமுள பாடையா தொன்றி னாயினும் 
பல்வேற் கட்டி நன்னாட் டும்பர்"

எனும் கம்பரின் கூற்றால் கம்பர் காலத்திலும் கூட மலையாளம் தனி மொழாயாக பிரியாததை உணரலாம்.

17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த துஞ்சத்து எழுத்தச்சன் 'ஆரிய எழுத்து' எனும் வட எழுத்து கலப்பில் நெடுங்கணக்கை மலையாளத்தில் வகுத்த பின்னரே அதுவும் கூட தனி மொழியாக பிரிந்தது.

200 ஆண்டுகளுக்கு மேலாக நம்மை அடிமை படுத்திய ஆங்கிலேயரில் தமிழரின் தாகத்தினை தீர்த்து உணவுக்கான விவசாயத்திற்கு வழிவகுத்த பென்னிகுக் போன்ற மாமனிதர்களும்
3000 ஆண்டுகளுக்கும் மேலாக இன்று வரை நாம் அடிமைகளாயிருக்கும் ஆரிய இனத்தில் பிறந்து ஆரிய மூட நம்பிக்கை மற்றும் இன வேறுபாட்டுக்கு எதிராக செயல் பட்ட சுப்ரமணிய பாரதி போன்றோர்களும்
பிறப்பால் திராவிடராக (தெலுங்கர்) இருந்தாலும் தமிழர் வளர்ச்சிக்கும் தமிழ் மொழி மற்றும் சாதிய எதிர்பையும் ஆதரித்த ஈவே ராமசாமி போன்றோர்களையும் தமிழ் மொழியின் சார்பாக தத்தெடுத்து அவர்களையும் தமிழர் என்றே அழைப்போம்

தமிழும் திராவிடமும் ஒன்று சேரமுடியாதபடி வேறுபட்டுள்ளதாலும், ஆந்திர கன்னட கேரளா என தனி மாகாணங்களாக பிரிந்து போனதாலும்
மேலும் ஆரிய சார்பைக்குறிக்கும் திராவிடம், திராவிடன், திராவிட நாடு எனும் சொற்களை அறவே ஒழித்து தூய்மை உணர்த்தும் தமிழ், தமிழன், தமிழ்நாடு என்னும் சொற்களையே இனி வழங்கவும் முழங்கவும் வேண்டும்.
தமிழில் இருந்து பிரிந்த திராவிட மொழிகள் வங்காளம் பரவியும் சிதறியும் கிடப்பதாலும்தாராவிடர்கள் தமிழர்களோடு கூட மறுப்பதனாலும்.


உதவிய நூல்:
செந்தமிழ் சிறப்பு
ஆசிரியர்: மொழி ஞாயிறு.தேவநேயப்பாவாணர்.

படைப்பு:
சு.ரகுநாத்

No comments:

Post a Comment