Sunday 14 April 2013

மழலைகள்

நேற்றைக்கு போவேன் என்பாய்;
நாளைக்கு போனேன் என்பாய்
காலப்பந்தாடும் காலன் நீ;
ஞாலம் கவரும் காமன் நீ.



மண்பிள்ளையாருடன் விளையாடுவாய்
சக்திவாய்ந்த சாமி உடையமாட்டார் என்பாய்
அதட்டியவரை நோக்கி - பார்வையில் ஆத்திகன் நீ;
சிந்தனையில் நாத்திகன் நீ.

கோபத்தில் நீ விடும் காய் சீக்கிரம்
பழுத்து பழமாகின்றது;
நண்பர்களின் தவற்றை மறக்கும்
மனப்பாங்கன் நீ.

சாக்ரடீஸ் - பெரியாரெல்லாம்
எப்போது படித்தாய்,
ஏன்? எதற்கு? எப்படி? என பதில் தெரியாக்
கேள்வி கேட்டு துளைக்கின்றாய் நீ.

உனக்கான தேவை கிடைக்கும் வரை
அடம்பிடிக்கும் போராட்டம் தொடர்வாய்;
அடியே விழுந்தாலும் அசர்வதில்லை நீ
போராளிகளின் பிம்பம் நீ.

-சு.ரகுநாத்
thamizhmani2012@gmail.com

4 comments:

  1. மழலைகளின் பேச்சை அனைவரும் ரசிப்பர். முதல் முறையாக ஒரு முற்போக்கு மழலையின் பேச்சு என்னை ரசிப்பதோடு இல்லாமல் சிந்திக்க வைத்துள்ளது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்திற்கு நன்றி தோழர்...

      Delete
  2. Replies
    1. தாமதமான பதிலுரைக்கு மன்னிக்கவும்..


      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..

      Delete