Sunday 28 April 2013

தொலைந்துபோன தொன்மைகள்

விவசாயம்

 

விவசாயம் கற்பித்த பெண்ணை போற்றி

வளர்த்ததுதான் பழக்கம்

அடி மாட்டு கூலிக்கு களை புடுங்க

வைப்பதுதான் இப்போதைய புழக்கம்

 

அடுத்த போக விளைச்சலுக்கு விதை நெல்லு

சேமித்துதான் பழக்கம்

விதை நெல் விலை கொடுத்து

நெகிழிப்பையில் இப்போதைய புழக்கம்

 

சேமித்த விதை நெல் சோதனையெல்லாம்

அந்தக்கால ஆராய்ச்சி பழக்கம்

முளைப்பாரி தூக்கிப்போயி ஆற்றில்

கரைக்கிற ஊராச்சி இப்போதைய புழக்கம்

 

இயற்கை கழிவு உரத்தால விளைந்த எல்லாம்

மனிதனுக்கு உரமானது பழக்கம்

வேதியல் உரத்தால சீக்கிரமே மனிதன்

மண்ணுக்கு உரமாவது இப்போதைய புழக்கம்

 

வானிலைய கணக்கு பார்த்து ஆடி காற்றில்

விதைச்சிதான் பழக்கம்

ஆடி பதினைட்டுனு தள்ளுபடியில் பொருள்

சேர்ப்பதுதான் இப்போதைய புழக்கம்

 

தோட்டக்காரன் தூங்கும் நேரம் மாடு

மேய்ந்துதான் பழக்கம்

மேய்ந்த நிலத்த மாடு பார்க்க புதுமனை புகுவிழா

புகுவதுதான் இப்போதைய புழக்கம்.

 

இடி தாங்கும் கேழ்வரகு விளைச்சலுக்கு

கோபுரத்தில பழக்கம்

பன்னிரண்டாண்டுக்கொரு முறை குடமுழுக்காகிப்

போனதுதான் இப்போதைய புழக்கம்.

 

-சு.ரகுநாத்.

No comments:

Post a Comment