Thursday 9 May 2013

பேருந்து பயணத்தில்

என்ன சாதியோ; என்ன மதமோ;
அருகமர்ந்தவர் தோள்
அவ்வளவு சுகமான தலையணை
தாய் மடியின் சுகம்
தாய் மாமன் தோள்களில்.

என்ன சாதியோ; என்ன மதமோ;
வாங்கிவைத்த குழந்தை

பேய்ந்தது மடியில் மூத்திரம்
தாய்மாமன் மடியாக
நனைந்தது முழுவதும்.

என்ன சாதியோ; என்ன மதமோ;
படி விளிம்பில் தொற்றிய என்னை
அள்ளி அணைத்த கரங்கள்
உடன் பிறந்த அண்ணனின்
அக்கறை வரங்கள்

என்ன சாதியோ; என்ன மதமோ;
ஈர் இருக்கையில் தனித்திருக்க
அண்ணா என உரிமையோடு
எழுப்பிவிட்டு அமரும்
இரு தங்கைகள்.

ஏனிந்த சாதியோ; ஏனிந்த மதமோ;
பார்ப்போரெல்லாம்
சொந்தமாக இருக்கையில்.

5 comments:

  1. மனம் கவர்ந்த அருமையான கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தாமதமான பதிலுரைக்கு மன்னிக்கவும்..


      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..

      Delete
  2. உங்களின் மனதின் எண்ணங்கள் அழகாக பதிவு செய்துள்ளீர்கள்

    ReplyDelete
  3. தாமதமான பதிலுரைக்கு மன்னிக்கவும்..


    தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  4. ARUMAYANA KAVITHAI NANBA...MANADHAI THOTTADHU...

    ReplyDelete