பசுமைநடை எனும் பெயரில் ஒரு வரலாற்றுப்
புரட்சி...
ஆதித் தமிழன் வாழ்வு தமிழி எழுத்துருவிலும்
ஓவியத்திலும்,
கடவுள் மறுத்து ஆரியம் எதிர்த்திட்ட
சமண தமிழ்த் தொண்டு
வட்டெழுத்திலும் சிற்பக் கலையுருவிலும்
தாங்குதெங்கள் மதுரை மலைகள்...
கல் திண்ணும் களவாணிகளுக்கு சாபச்
சங்காய் ஒலித்த
எங்கள் மலை கீழ் வாழ் மாமக்கள்
எம் மாமதுரையின் புதையல்கள்...
அச்சங்கின் எதிரொலியாய் ஒலிக்குதெங்கள்
பசுமைநடை...
நாற்பதாவது நிகழ்வு
******************************
பசுமைநடையின் நாற்பதாவது நடை;
மலைப் பாறைகளை கொண்டாடிட;
பாறைத் திருவிழா ஏற்பாடு ராப்பகலாய்க்
கலைகட்ட;
நாற்பதும் நமதென முழங்கியவர்களை
நாடுகடத்தி,
கருநாடகத்தில் சிறைபிடித்திட;
தமிழகமெங்கும் தமிழர்களை காவாலிகள்
வீட்டினுள் சிறைபிடிக்க;
அரங்கேரியதெங்கும் அநாகரீகம்...
விடிந்தால் எல்லாம் விடியும் எனக்
காத்திருக்க;
பேருந்துகளும் மையங்களில் சிறைபட்டு;
வரவேணும் என தவமிருந்து வரம் பெற்றவர்கள்,
நண்பர்களையும் அன்பர்களையும் அழைத்த
படி;
தத்தம் வாகனங்களில் படை எடுக்க;
விடியும் முன்பே குழுமியது
இயற்கைக் காதலர் கூட்டம்
கீழக்குயில்குடி மலை அடிவாரத்தில்...
கருமழை மேகமும் இரவு வானமும்
கருங்கம்பளி விலக்காது;
மழை ஒத்திகையில் களம் இறங்க;
ஆலமரத்தினை பந்தலாக்கிய திருவிழா
அடுத்த நிலைக்காய் அசையாது காத்திருக்க;
கீழக்குயில்குடிச் சமண மலை
“தனக்குத்தானே கொண்டாட்டம்”
என அறிந்து;
வெள்ளிக்கிமை மங்கையாய் தலை குளித்து;
மயிரிலையில் நீர் சொட்டச் சொட்ட,
தாமரைத் தடாகத்தினை கண்ணாடியாக்கி;
நிதாணமாக அலங்கரித்துக் கொண்டிருந்தாள்...
மலையவளை அலங்கரித்த மழையவள்;
தன் வேலை முடிந்ததும் அழகுசாதனப்
பெட்டியோடு
அடுத்த வைபம் எங்குமில்லாது கடந்து சென்றாள்...
திருவிழா கோலாகல துவக்கம்
*********************************
செட்டிப்புடவு நோக்கி பாறைத்திருவிழாவின்
முதல் நகர்வு;
குழந்தையும் பெண்களும் அவர்களுடன்
ஆண்களும் செட்டிப்புடவில்;
மிக உயர்ந்த மாமனிதர் மாவீரரின்
உயரமான சிற்பத்தின் முன் அமர்ந்து;
இம் மலையோடு தமிழ் காத்து நிற்கும்
சமணத் தொன்மையினை
தொல்லியல் அறிஞர் எங்களய்யா சாந்தலிங்கம்
விளக்கிட கேட்டவர்கள்;
அப்பகுதியின் ரம்மியத்தினையும்
ரசித்தனர்...
ரசித்தவர்கள்,
ருசித்திட காலை உணவு பரிமாறிட;
விழா அடுத்த கட்டத்தினை நோக்கி
நகர்ந்தது
குழந்தைகள் விளையாடவும் பெரியவர்கள்
சொல் கேளவும்...
முயற்சியாளர் என்றொருவர், அவர்
பெயர் அ.முத்துக்கிருஷ்ணன்...
பசுமைநடையின் விடா முயற்சியாளரல்ல
இவர்;
எக்காலத்திலும் இதனை விட்டுவிடா
முயற்சியாளர்...
தடைகள் பல வந்தாலும் தான் கொண்ட
காரியத்தில் முயலும் இவர்
பசுமைநடை கடந்து வந்த பாதைகளை
விவரித்துத் துவங்கினார் நிகழ்வினை...
மதுரையின் தொன்மை உலகரியச் செய்திட
மதுர வரலாறு எனும் பசுமைநடையின்
வரலாற்று நூல்
ஆங்கித்திலத்தில் வெளியிட;
கீழக்குயில்குடி ஊர்த்தலைவர் வெள்ளந்தியாய்
பேசிட;
அய்யா சாந்தலிங்கம் தொல்லியலில்
பாறை குறித்து உரைத்திட;
அய்யா தியொடர் பாஸ்கரன் இன்னும் அரசு பல பாறைக் கல்வெட்டுகளை
ஆவணப்படுத்தவில்லை என்ற குண்டொன்றை
வீசிட;
பசுமைநடையின் செயல்பாடுகள் குறித்து
நண்பர்களும் அன்பர்களும்
வாழ்த்துப்பா பாடிட விழா நிறைவடைந்தது...
மதிய அருசுவை உணவோடும்;
குழந்தைகளுக்கு பயிற்சி முகாம்
பரிசோடும்;
கிளம்பிய அன்பர்கள் யாவரும்
நாற்பத்தியோராவது நிகழ்வில் சந்திக்கும்
மகிழ்வோடும்;
பாறைத்திருவிழா உண்டாக்கிய நினைவோடும்
ஊர்ந்து சென்றனர்...
அன்பும் நன்றியும்
பாடுவாசி
paaduvaasi@gmail.com
This comment has been removed by the author.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றியும் மகிழ்ச்சியும் அண்ணா.. :-)
Deleteக விதை நலம் கட்டுரை பலம்...
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றியும் மகிழ்ச்சியும் தலைவரே.. :-)
Deleteதம்பி லேட்டா வந்தாலும் லேட்டஸ்ப்பா
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றியும் மகிழ்ச்சியும் அண்ணா.. :-)
Deleteஅருமையான பதிவு.
ReplyDeleteநன்றி.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றியும் மகிழ்ச்சியும் அய்யா.. :-)
Delete