மழைக்கால பேருந்து பயணங்களில் சன்னலோர இருக்கைகள் ஏனோ காலியாகவே கிடக்கின்றன.
சன்னலோர சிலு சிலு காற்றுக்கு ஆவல் கொண்டு முட்டி மோதி ஏறியவர்கள் கூட, சன்னலோர இருக்கைகளை
தாராளமாக தாரை வார்ப்பது அதிசயமானதுதான். காரணம், மழைநீர் முத்துப்போல நிற்கும் வலுவலுப்பான
இருக்கைகளில் அமர ஏனோ பலருக்கு சங்கடம். லேசான மழைச்சாரல் சன்னலோரம் முகத்தில் பட்டதும்
படுவேகமாக சன்னலை அடைக்க பாயும் மனித கரங்கள். பனிவிழும் காலை நேரங்களில் பேருந்து
சன்னலை அடைத்துவிட்டாலும் தங்களது காதுகளையும் வெண்பஞ்சினால் அடைத்துவிட்டுத்தான் பயணிக்கின்றனர்
ஏராளமானோர். இரு வளையங்களுக்கு நடுவே பின்னப்பட்ட கம்பளி இலைகளை
Thursday, 30 January 2014
Monday, 23 December 2013
ஓடித்திரியும் வாழ்க்கை
வெகு தூர பேருந்து பயணங்களில் மெய் மறந்து தூங்கியவர்களை எழுப்பிவிட்டு, அவர்கள் இறங்க வேண்டிய ஊர் வந்துவிட்டதா என எட்டிப்பார்க்க வைக்கிறார்கள். வேர்க்கடலை, தண்ணி பாக்கெட், வெள்ளரி பிஞ்சி, ஆண்ணாசி பழம் என பயணம் எனும் திரைப்படத்தில் இடைவேளை காட்சிகளில் வந்து பருவநிலைக்கு ஏற்ப கொரிக்க ஏதேனும் கொடுத்துவிட்டு பின்னோக்கி நகர்கிறார்கள்.
எத்தனையோ பயணங்களில் இதய நோயாளிகளின் மரணத்தை தள்ளிப் போட்டது முந்தைய நிறுத்தத்தில்
இவர்கள் கொடுத்த புளிப்பு மிட்டாயாகத்தான் இருக்கும். பணம் படைத்தவன் முதல் இல்லாதவன்
என யாராக இருந்தாலும் இவர்களிடம் கிடைக்கும் பொருளை எளிதில் வாங்கிவிடலாம். அந்த அளவு
மிக மலிவானதே இவர்கள் விற்கும் பொருள் இவர்களின் வாழ்க்கை போல.
Thursday, 14 November 2013
காதலெனப்படுவது - சிறுகதை
“டேய் சரசு நீதான் உங்க அப்பா அம்மாகிட்ட ஏற்கனவே சொல்லீட்டேலடா… நாங்க வேற
எதுக்குடா கூட வரணும்” கொஞ்சம் பயத்தோடதான் கேட்டேன்.
சரசு பதில் சொல்வதற்குள் கோட்டைச்சாமி முந்திக்கொண்டான். “டேய் மஞ்சமாய்க்யாங்..
பயந்து சாவாதடா.. அவன் ஆசைப்பட்டான் அவங்க வீட்டு சம்மதம் இருந்தா பஞ்சாயத்தே இல்லேலடா..”
(அவென் வீட்டுக்கு நாம போனாலே பஞ்சாயத்துதானடா..) மனதில் ஓடிவதை வெளிக்காட்டாமல் “நான் பயப்படலடா மாப்ள.. நாம போய் நின்னு பேசுறதுக்கு பதிலா அவனே பேசிட்டான்னு வச்சிக்க- ஓகே ஆக சான்ஸ் இருக்குடா மச்சி” என பயம் வெளியே தெரியாம எவ்வளவோ சமாளித்தேன். ரெண்டு பயளும் கேக்கல.
Thursday, 26 September 2013
பெண்ணியம் பேசுவோம் கொஞ்சம்...
தலைப்பை பார்த்ததும்,
“இப்போ பெண்களுக்கு என்ன குறைச்சல், அவங்க இப்பலாம் எங்க அடிமைப்படுத்தப்படுறாங்க,
எல்லா துறைலயும் சாதிச்சிட்டுத்தானே இருக்காங்க, என் சம்சாரம் என்ன அடிக்கிற அளவுக்கு
நான் அவளுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கேன்” என்ற பல விவாதங்கள் எழலாம். இப்படியான
விவாதங்கள் எழுவதே பெண்ணியம் இன்னும் மலரவில்லை என்பதற்கான உதாரணங்கள்தான்.
எனது அம்மாவின்
இளமைக்காலங்களில் அவரது வீட்டில் சோறு ஆக்கினால் அது அண்ணன்களுக்கும் தம்பிகளுக்கும்
மட்டும்தான். பெண்பிள்ளைகளுக்கு எப்போதும் பழையதுதான். இந்நிலை 1970-களில் பல வீடுகளில்
இருந்துள்ளது. இந்நிலை இப்போது பெரும்பாலும் இல்லை என்பதாலோ, பெண்கள் அதிகம் சம்பாதிக்க
துவங்கிவிட்டார்கள் என்பதாலோ, பெண்கள் அவர்களுக்கு பிடித்ததை செய்துகொள்கின்றார்கள்
என்பதாலோ பெண்கள் முழு சுதந்திரத்துடன் செயல்படுகிறார்கள் என எடுத்துக்கொள்ள முடியாது
Subscribe to:
Posts (Atom)


