Saturday 25 August 2012

பசி, தாகம் - விற்பனைக்கு

" பசி, தாகம் - விற்பனைக்கு " இது போல ஒரு விளம்பர பதாகை இருப்பின் அந்த விளம்பர பொருளை நாம் வாங்கி நுகர விரும்புவோமா? "இல்லை" என்ற பதில் அதிகமானவர்களிடம் இருந்து வரும். ஆனால் உண்மை அதுவல்ல. நம்மில் பலர் அதையே விரும்பி நுகர்கின்றோம்.பசி தீர்க்கும் விவசாய நிலமோ, தாகம் தணிக்கும் நீர் நிலைகளோ எதுவுமே நமக்கு வரைமுறை இல்லை. கல்களை நட்டு கொடிகளை நாட்டிவிட்டால் போதும் எந்த நிலம் என்று அதன் பின்னணி என்ன என்றே அறிந்து கொள்ளாமலும் அறிந்தும் அதை பற்றி சட்டை செய்யாமலும் அதன் விலை விசாரிப்பவர்களை காண்கையில் எனக்கு அவர்கள் வேறு விதமாக தெரிகிறார்கள். விபச்சார விடுதிக்கு சென்று துணியால் மூடி இருப்பது தன் தாய் அல்லது சகோதரி என்று தெரிந்தே விலை விசாரிப்பது போலவே தெரிகிறது.



ஊர் கோவில் திருவிழாக்களில் மைக் செட் கட்டிக்கொண்டு அங்கு கூட்டம் கூட்டமாக வரும் விவசாய குடும்பங்களை வரவேற்று கொண்டும் கூட்டத்தில் தொலைந்த குழந்தைகளையும், தொலைத்த மனைவியையும் கண்டுபிடித்து கொடுக்கும் பணியை செய்தவர்கள் கூட, இன்று அதே மைக் செட் கட்டிக்கொண்டு அந்த விவசாய குடும்பங்களுக்கே விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்கிற வியாபார யுக்தி வளர்ந்து கிடக்கிறது.

அனைத்தும் வியாபாரம். தாய் பாலில் இருந்து, உயிரணு வரை. காற்றில் இருந்து தண்ணீர் வரை அனைத்தும் வியாபாரம். விவசாயத்தினை அழித்து என்னத்த திங்கப்போகிறோமோ நாம்?

பொன் முட்டையிடும் வாத்து கதைகளை தன் குழந்தைகளின் பாட புத்தகத்தில் இருந்து விவசாய பெருமக்கள் என்று எடுத்து படிக்கின்றார்களோ அன்று தான் அந்த நிலத்தின் அற்ப்புதம் அவர்களுக்கு புரியும். காலம் காலமாக அவனுக்கும் ஊரானுக்கும் சோறிட்ட அன்னையை ஒரு மாத சுடு சோற்று பசிக்காக விற்று பிழைக்கும் நிலை நம் விவசாய தோழமைகளுக்கு வந்தது கொடுமையே. உலகுக்கே சோறு போடும் நிலத்தினை விற்ப்பது நமக்கு சோறிட்ட தாயை விற்ப்பதர்க்கு இணையே.

நிலத்தினை விற்பவர்கள் ஒரு சாரார் என்றால் மற்றொரு சாரார் அதிக விளைச்சலுக்கு இந்த கேடுகெட்ட அரசாங்கத்தின் பேச்சினை கேட்டு கொண்டு ரசாயன - விடம் நிறைத்த மருந்துகளை நிலத்தில் இட்டு நில தாயை மலடாக்கி வருகின்றனர். முப்பாட்டன், பாட்டன், தாத்தன், அப்பன் என எத்தனையோ தலைமுறை வளர சோறிட்ட இந்த மண்ணை அடி மாடு போல விற்ப்பதர்க்கு எப்படி தான் மனம் வருகிறதோ? பெண்களை விற்பவர்கள் மாமாக்கள் என்றால் மண்ணை விற்கும் நீங்களும் மாமாக்களே!! பெண்ணை விற்பவர்கள் புரோக்கர்கள் என்றால் மண்ணை விற்று பிழைக்கும் நீங்களும் புரோக்கர்களே!!

இருக்கும் எல்லாரும் விவசாயத்தினை விட்டு விட்டு பொறியாளராகி என்ன புடுங்க போகின்றீர்கள்? பொறியாளன் பசி எடுத்தால் எதை தின்பான்? விவசாயம் ஒரு காலகட்டத்தில் முழுவதும் நிற்கும் போது அரிசிக்கும் பருப்புக்கும் காய்க்கும் கனிக்கும் கிழங்குக்கும் கீரைக்கும் எங்கே போவது? யாரை கேட்ப்பது? வெளி நாட்டில் இருந்து இறக்குமதி ஆகும் பிளாஸ்டிக் மோல்டிங்கில் ஆனா அரிசியையும் பருப்பையும் தின்று அதை ஜீரணம் செய்ய வெளிநாட்டில் இருந்தே இறக்குமதி ஆகும் மாத்திரைகளை உண்டு திரிய போகிறோம். அது தானே நடக்கும்.

மாடி மாடியாக வீடு கட்டினாலும் நாம் திங்கப்போவது கல்லையும் மண்ணையும் அல்ல. கண்மாய்களிலும், விவசாய நிலங்களிலும் நாம் எழுப்பும் மாடி கட்டிடங்கள் நம் தாய் மாடிக்கான சமாதி என்பதை நினைவில் கொள்ளவோம். பணம் என்ற காகிதத்தினை தான் நம் சந்ததி திங்க போகிறது என்று தெரிந்து கொண்டு கழுதையை கருவில்  சுமக்க கூட தயாராவார்கள் போல.

இளைய தலைமுறைக்கு ஒரு நல்ல யோசனை. இன்னும் பத்து ஆண்டுகளில் விவசாய தொழில் ஒன்று இருக்காது. விவசாயி என்று ஒரு மனிதர் கூட இருக்க மாட்டார். ஆனால் அப்போதைக்கு லாபம் ஈட்டக்கொடிய ஒரே தொழில் விவசாயம் மட்டுமே. இப்போதே நவீன இயற்க்கை முறைகளில் விவசாயத்தினை கொண்டு செலுத்த ஆயத்தமாகுங்கள். உங்களால் மட்டுமே இது சாத்தியம்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
-அய்யன்.வள்ளுவன்.

படைப்பு:
சு.ரகுநாத்
thamizhmani2012@gmail.com 

2 comments:

  1. நல்ல உரைக்கின்ற வகையில் சொல்லிவிட்டீர்கள். செயல்படுத்தவது எங்கள் கையில்... நன்றி தோழரே

    ReplyDelete
  2. திருத்தம்.செயல்படுத்தவது நமது கைகளில்... :-) நன்றி தோழரே..

    ReplyDelete