“தமிழ்” என் தாய்...
“நம்மள மட்டும்தான் இப்படி வித்தியாசமா பார்க்கிறானுகளா?? எது பேசினாலும் மேலும்
கீழுமாத்தானே பார்க்கிறானுக.. நாம சரியாத்தானே பேசுறோம்” இந்த கேள்வியாலும் குழப்பத்தினாலும்
அதிகம் பாதிக்கப்பட்டு இருந்த காலம் அது. பழகியவர்கள் கூட வம்புக்காகவே என் முன் என் தமிழ் மொழியை பழித்துப் பேசும் போதுதான், நான் அவர்களிடம் இருந்து எதில் வித்தியாசப்பட்டுள்ளேன் என்பதை உணர்ந்தேன். தமிழ் பற்றி
பேசியதற்கே இப்படி என்றால் இன்னும் நான் முழுக்க முழுக்க தமிழில் பேசிவிட்டால் என்னை
இந்த ஊரை விட்டே.. இல்லை.. இல்லை… இந்த நாட்டினை விட்டே ஒதுக்கி வைத்திருப்பார்கள்.
தமிழ் மொழியினை நேசிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் இந்த சம்பவத்தினை
கடந்தே வந்திருப்பார்கள்.Friday, 7 June 2013
Thursday, 9 May 2013
பேருந்து பயணத்தில்
என்ன சாதியோ; என்ன
மதமோ;
அருகமர்ந்தவர்
தோள்
அவ்வளவு சுகமான
தலையணை
தாய் மடியின் சுகம்
தாய் மாமன் தோள்களில்.
என்ன சாதியோ; என்ன
மதமோ;
வாங்கிவைத்த குழந்தை
Sunday, 28 April 2013
தொலைந்துபோன தொன்மைகள்
விவசாயம்
விவசாயம் கற்பித்த பெண்ணை போற்றி
வளர்த்ததுதான் பழக்கம்
அடி மாட்டு கூலிக்கு களை புடுங்க
வைப்பதுதான் இப்போதைய புழக்கம்
அடுத்த போக விளைச்சலுக்கு விதை நெல்லு
சேமித்துதான் பழக்கம்
விதை நெல் விலை கொடுத்து
நெகிழிப்பையில் இப்போதைய புழக்கம்
Friday, 19 April 2013
மை பேனா...
அனா ஆவணா கற்க
துவங்கிய காலம் அது.. விவரம் அறியாத அந்த வயதில் என்ன படித்தோம்; எப்படி புரிந்துகொண்டோம்
என்பதெல்லாம் விடை தெரியாத கேள்விகள். இருந்தாலும் அப்போது கற்ற தாய்மொழி அறிவு இன்று
வரை வற்றிப்போனது இல்லை. இதுதான் தாய்மொழியின் சிறப்பு போலும். (ஒன்றாம் வகுப்பினில்
இரண்டு முறை உட்கார்ந்து அடித்தளம் உறுதியாக போட்டதும் கூட காரணமாக இருக்கலாம்.) சிலேட்
குச்சி பயன்படுத்தி எழுதிய நாட்களில் பென்சில் கொண்டு எழுத வேண்டும் என ஆவல் தூண்டும்.
பென்சில் பிடித்து எழுத துவங்கும் போது தான் குச்சி திங்க முடியாமல் போன கவலை தொற்றிக்
கொண்டது. இருப்பினும் பென்சிலின் முனையை கடித்து கடித்து வைத்த காலங்களும் உண்டு.
Subscribe to:
Posts (Atom)
