கவிதை என் வாழ்க்கைக்கு அர்த்தம்
கொடுத்த காதலி. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்பின்னும் ஒரு பெண் இருப்பார்களாம். என் வெற்றிக்குப்
பின்னாலும் ஒரு பெண், அவள் என் கவிதை. ஏமாற்றங்களால் நிறைந்த என் வாழ்க்கையில் ஒரு
மாற்றத்தினை கொண்டுவந்தவள் அவளே. எனது அக்காவே அவளை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.
இன்னும் சொல்லப் போனால் அவள் என் அக்காவின் நெருங்கிய தோழி. பள்ளிக் காலங்களில் காதலியாக
அவளை மடக்கிவிட ஆவல். எனது அக்காவின் தோழி என்பதால் அக்காவிடம் மட்டுமே எப்போதும் கதைத்துக் கொண்டிருப்பாள்.
Monday, 14 July 2014
Friday, 4 April 2014
குக்கூ… எனும் ஓவியம்
பார்வையற்றவர்கள் என்ற வார்த்தையை பொய்யாக்கியிருக்கிறது குக்கூ. இந்த திரைப்படத்தினை கண்ட எனக்கு அந்த
வார்த்தையை உச்சரிக்க வாய் கூசுகிறது, எழுத கை கூசுகிறது. உண்மையில் நாம் தான் அவர்களின்
உலகத்தை காண முடியாத, அவர்கள் ரசிக்கும் வண்ணங்களை ரசிக்க இயலாத பார்வையற்றவர்களாக சுற்றித் திரிகிறோம். அவர்களை
மாற்றுப்பார்வையுள்ளவர்கள் என எழுதுவதும் பேசுவதும் மட்டுமே சரியாக இருக்கும். இந்த
உண்மையை உரக்க சொன்னதற்காக குக்கூவுக்கும் அந்த ஓவியத்தினை திறம்பட தீட்டிய அறிமுக
இயக்குனர் ராஜூமுருகனுக்கும்
Thursday, 30 January 2014
இயற்கை சீற்றமா? மனித குற்றமா?
மழைக்கால பேருந்து பயணங்களில் சன்னலோர இருக்கைகள் ஏனோ காலியாகவே கிடக்கின்றன.
சன்னலோர சிலு சிலு காற்றுக்கு ஆவல் கொண்டு முட்டி மோதி ஏறியவர்கள் கூட, சன்னலோர இருக்கைகளை
தாராளமாக தாரை வார்ப்பது அதிசயமானதுதான். காரணம், மழைநீர் முத்துப்போல நிற்கும் வலுவலுப்பான
இருக்கைகளில் அமர ஏனோ பலருக்கு சங்கடம். லேசான மழைச்சாரல் சன்னலோரம் முகத்தில் பட்டதும்
படுவேகமாக சன்னலை அடைக்க பாயும் மனித கரங்கள். பனிவிழும் காலை நேரங்களில் பேருந்து
சன்னலை அடைத்துவிட்டாலும் தங்களது காதுகளையும் வெண்பஞ்சினால் அடைத்துவிட்டுத்தான் பயணிக்கின்றனர்
ஏராளமானோர். இரு வளையங்களுக்கு நடுவே பின்னப்பட்ட கம்பளி இலைகளை
Monday, 23 December 2013
ஓடித்திரியும் வாழ்க்கை
வெகு தூர பேருந்து பயணங்களில் மெய் மறந்து தூங்கியவர்களை எழுப்பிவிட்டு, அவர்கள் இறங்க வேண்டிய ஊர் வந்துவிட்டதா என எட்டிப்பார்க்க வைக்கிறார்கள். வேர்க்கடலை, தண்ணி பாக்கெட், வெள்ளரி பிஞ்சி, ஆண்ணாசி பழம் என பயணம் எனும் திரைப்படத்தில் இடைவேளை காட்சிகளில் வந்து பருவநிலைக்கு ஏற்ப கொரிக்க ஏதேனும் கொடுத்துவிட்டு பின்னோக்கி நகர்கிறார்கள்.
எத்தனையோ பயணங்களில் இதய நோயாளிகளின் மரணத்தை தள்ளிப் போட்டது முந்தைய நிறுத்தத்தில்
இவர்கள் கொடுத்த புளிப்பு மிட்டாயாகத்தான் இருக்கும். பணம் படைத்தவன் முதல் இல்லாதவன்
என யாராக இருந்தாலும் இவர்களிடம் கிடைக்கும் பொருளை எளிதில் வாங்கிவிடலாம். அந்த அளவு
மிக மலிவானதே இவர்கள் விற்கும் பொருள் இவர்களின் வாழ்க்கை போல.
Subscribe to:
Posts (Atom)



