Thursday 7 June 2012

என் மண்ணின் அவல அறிமுகம்:

முதலில் எனது அறிமுகத்தினை விட, நான் பிறந்த மண்ணின் அறிமுகம் தான் இப்போதைக்கு முதல் தேவை...

திருமங்கலம் எனது பிறப்பிடம்.

எனது ஊரை பற்றி உங்களுக்கு தெரிந்தது


1. தமிழ் ஈழ விடுதலை புலிகளை ஆதரித்து திருமங்கல மேடையில் முழங்கியதற்க்காக திரு.வைகோ அவர்கள் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டது,
2. தீவிரவாதி என்று கைது செய்யப்பட்ட இமாம்அலி என்பவர் தப்பிசென்ற ஊர்.
3. இடைத்தேர்தலில் வாக்குறிமையை மூவாயிரம் ரூபாய்க்கும், பிரியாணி பொட்டலங்களுக்கும் விற்ற மக்கள் வாழும் மண்.
இதுதான் உங்களுக்கு தெரியும். 

எங்களின் விவசாயத்துக்கு பெரிதும் பயன்படுத்தும் எங்கள் பகுதி நிலத்தடி நீரை நாங்கள் தாரை வார்தது கொடுத்துக்கொண்டிருப்பது யாருக்கு தெரியுமா?தெற்கு ரயில்வேக்காக சிமென்ட் கான்கிரிட் தண்டவாளம் தயாரிக்கும் பணிக்கு. 
தென்இந்தியா முழுவதும் திருமங்கலம் மட்டுமே ஒரே இடம். நிலத்தடி நீர் விவசாயத்துக்கு மட்டுமே பயன்பட வேண்டும் என்பது தானே நியதி. நான் தெரியாமல்தான் கேட்கிறேன். தெரிந்தவர்கள் பதில் சொல்லவும்.

இதில் இன்னும் கொடுமை, இந்த தண்டவாளக்கல் இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் வேறு ஏற்பாடு ஆகிவிட்டது.திருமங்கலம் மக்களாகிய நாங்கள் இழந்தது அதிகம். 

திருமங்கலத்தில் இருந்து ரயில்வே தண்டவாள ஸ்லிப்பர் கல்கள்  சிங்கள மண்ணுக்கு வெகு விமர்சையாக வியாபாரமாகி கொண்டு இருக்கிறது. 
இது வரை பத்து (Load ) முறை ஏற்றுமதி ஆகிவிட்டது என்று அங்கு பணி புரியும் பணியாளர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். பெரிய கண்டைனர்களின் மூலம் ஏற்றுமதி அமோகமாக நடந்தேரிக்கொண்டு இருக்கிறது.

மதுரையை சேர்ந்த தமிழ் ஈழ ஆதரவாளர் கூட்டமைப்பு  இதற்க்கான எதிர்ப்பு சுவரொட்டிகளை திருமங்கல நகரெங்கும் ஒட்டி திருமங்கல மக்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்த முனைந்துள்ளது. 
இனியாவது விழிக்குமா திருமங்கலம்???



படைப்பு:

சு.ரகுநாத்
thamizhmani2012@gmail.com

No comments:

Post a Comment