Friday 8 June 2012

குடிமகன்

"குடிமகன்" என்ற சொல் நாட்டின் பிரஜை என்ற அர்த்தத்தினை உடைத்து வெகு காலங்கள் ஆகிப்போனது. 
இப்போது குடிமகன் என்றாலே மதுவிற்க்கு அடிமையான மனிதனை சித்தரிக்கும் கேலிச்சொல்லாகிபோனது.

குடியால் குடல் வெந்து இறந்தவர்களை கண்டுள்ளேன். குடியால் தங்கும் குடிசை இழந்தவர்களையும் கண்டுள்ளேன். குடியால் ஆடை இழந்து தெருவில் கிடப்பவர்களை மட்டுமே என்னால் படமாக்க முடிந்தது.
குடல் வெந்து இறந்தவர்களையோ குடிசை இழந்து தவிப்பவர்களையோ படமாக எடுக்க முடியவில்லை. அவர்களை பாடமாகவே படிக்க முடியும்.

போதைக்கு அடிமையானவர்கள் எப்படி தங்கள் போதை வாழ்க்கையில் நுழைந்தார்கள் என்று வரலாறு சேகரிக்க முற்பட்டேன்.
ஒரு நண்பர் " நான் பரிட்ச்சையில் தோல்வி அடைந்த துக்கத்தில்" துவங்கிய திட்டம் போல விவரிக்க ஆரம்பித்தார்
மற்றொருவர், " காதல் தோல்வி" என்று நான் கேட்டதை விடுத்து அவரின் காதல் சல்லாபங்களை கொட்டி தீர்த்தார்.
நான் நினைத்தேன் ஓ... தோல்வியும் துக்கமும் தான் இதற்கு காரணம் என்று. ஆனால் அடுத்த நபரிடம் கேட்க்கும் போது எனக்கே மது அருந்தாமல் தலை சுற்றியது.
அவர் சொன்னார் "எதிர் பாராத விதமாக நான் பரிட்ச்சையில் தேர்ச்சி அடைந்துவிட்டேன் அது தான்" என்று மிக பெருமிதமாக சொல்லிக்கொண்டு இருந்தார், நான் அந்த இடத்தினை விட்டு நகர்ந்தது கூட தெரியாமல்.

சந்தோசம், துக்கம் இவ்விரண்டையும் ஒரே போல எடுத்துகொள்ள வேண்டும் என்று நான் என்றோ படித்தது அப்போது எதற்கு எனக்கு நினைவு வந்தது அது ஏன் என தெரியவில்லை..ஆனால் அன்று வரலாறு என்ற சிறப்பான வார்த்தையை தவறாக பயன்படுத்தியதை எண்ணி வருந்தினேன்..

பொது இடங்களில் ஆடை இழந்து கிடப்பவர்களை பார்க்கும் போது கேவலமா இருக்கும். ஆனால் அதே போதையில் கிடக்கும் மகனை பிணத்தினை போல தூக்கி ஆட்டோவில் ஏற்றும் தந்தையை பார்க்கையில் நெஞ்சு பதிக்கும்.

நண்பர்கள் மது அருந்திவிட்டு வாந்தி எடுத்த வீரர்களை அடுத்த நாள் நண்பர்கள் கூட்டத்தில் வைத்து கேலி செய்து தான் என்னவோ அவனை விட வீரன் போல காட்டி கொள்வார்கள்.. 

கேட்டு போன பழங்களையே உண்ண அருவருக்கயில் எப்படி இந்த சாக்கடையை வாயில் ஊற்றுகிரீர்கள்??

உண்மையில் மது உண்டு எதை சாதித்தீர்கள்?? எந்த கவலை உங்களிடம் இருந்து போனது?? என்ன மகிழ்ச்சி கிடைத்தது?? 

இது போல சாலையில் நிதானம் இழந்து கிடப்பது தான் ஆனந்தமா?? 


படைப்பு:
சு.ரகுநாத்
thamizhmani2012@gmail.com

No comments:

Post a Comment