Friday 22 June 2012

ஆரிய வலையில் தமிழ் மீன்


தமிழே ஞாலத்தின்(உலகின்) முதன் மொழி, அதேபோல தமிழனே ஞாலத்தில் முதல் மாந்தன்(மனிதன்) என்று தமிழ் ஆர்வளர்கள் மட்டுமல்ல மொழி ஆய்வாளர்களும் அறிஞர்களும் சொல்லியும் எழுதியும் உள்ளதன் காரணம் தமிழர்களாகிய நாம் நமது வரலாற்றினை தெரிந்து கொள்வதற்கு மட்டுமல்ல, நமது தமிழ் பரம்பரைக்கும் நமது வரலாற்றினை பிழையின்றி கொண்டு சேர்க்கவுமே.

அதன்படி தமிழறிஞர்.திரு.தேவநேய பாவணர் அவர்களின் தமிழ் ஆய்வுகள் என்னை மிகவும் பாதித்தது. அவருடைய ஆய்வுகளோடு என் ஆதங்கங்களை  எழுத்தில் சேர்த்துள்ளேன்.


நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற இந்த உலகம் சுமார் 500 கோடி ஆண்டுகளுக்கு முன் கதிரவனில் (சூரியனில்) இருந்து கழன்று சிதறிய அனல் பிழம்புகளில் ஒன்று. நீள் வட்டப்பாதையில் கதிரவனை சுற்றிக்கொண்டே இருக்கும் இந்த நெருப்பு உருண்டையின் மேற்பகுதி சுழற்சி விசையால் குளிர்ந்து இறுக்கமாகியது நாம் ஆராய்ந்து அறிந்ததே. அப்படி குளிர்ந்த முதல் பகுதி உலக உருண்டையின்
நடுப்பகுதி. அதுதான் குமரிக்கண்டம். 

உருண்டு திரண்டதால் உலகம் என்றும், அந்தரத்தில் ஞாலுவதால் (தொங்குவதால்) ஞாலம் என்றும் ஆதி முதல் அனைத்திற்கும் காரணப்பெயர்களே இட்டுள்ளனர் நம் பாட்டணார்கள். 


"எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவே"
-(தொல். சொல். 157)

குமரிக்கண்டமே முதல் நிலைத்திணை(தாவரம்) உயிராகிய ஒரறிவு உயிர் தோன்ற தக்க தட்ப வெப்ப சூழ்நிலை கொண்ட இடமாக இருந்திருக்கின்றது.அன்று அமீபா துவங்கி இன்று ஆரிய அடிமைகளாக பரிணமித்து கிடக்கிறோம்.

முதல் உயிர் பிழைத்த இடத்தில் தானே முதல் மொழியும் தழைத்திருக்கும். சைகைகள், குறிகள், சித்திரங்கள், சப்தங்கள், ஓசைகள், வார்த்தைகள் என்று மொழிக்குமே இத்தனை பரிணாமங்கள்.
இவ்வாறு உலகின் முதல் மனித உயிரும் முதல் உயிர் மொழியும் பரிணமித்துள்ளது. 
தமிழனின் இந்த பரிணாமம் ஆரிய கவர்ச்சியில் மயங்கி பின் நோக்கி பரிணமித்தது போல, தமிழ் மொழியும் ஆரிய மொழி திணிப்பால் அதன் மதிப்பிழந்து பின் நோக்கிய பரிணாமத்திலேயே இருக்கின்றது.
தொழ்காப்பியரின் காலத்திற்கும் முன்பே ஆரிய கூட்டம் தமிழ் பகுதிகளுக்குள் ஆக்கிரமித்திருக்கின்றனர்.

"வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணரந்த சொல்லா கும்மே"(தொல்.சொல்.401)

ஆடு மேய்க்க வந்த ஆரிய நாடோடிகள் ஆட்டக்கலையில் கைதேர்ந்தவர்கள். அவர்கள் அந்த கூத்தாட்டத்தினையே சமஸ்கிருத திணிப்புக்கும் கடவுள் திணிப்புக்கும் பயன்படுத்தியுள்ளனர்.
சிலப்பதிகார காலத்திலும் கூட ஆரிய ஆட்டம் பல அரங்கேரியிருக்கின்றது. "மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட"க் கோவலன் கண்ணகி திருமணம் நடந்ததாக சிலப்பதிகாரத்தில் தான் முதன் முதலாக சொல்லப்படுகின்றது. கண்ணகிக்கு தேவந்தி எனும் பார்ப்பணத்தி தோழி இருந்ததாகவும் அவள் ஆரிய பண்பாட்டினை கண்ணகியிடம் புகுத்த எண்ணமாய் இருந்ததினையும், கண்ணகி அதனை நாகரீகமாக மறுத்து ஒதுக்கியதையும் சிலப்பதிகாரம் கூறுகிறது.

கோவலனை அறியாது கொன்ற நெடுஞ்செழியன் ஆரியப்படையை வென்றவன், பார்ப்பணர்க்கு பல உதவிகள் செய்த கோவலனைக் கொன்றவன், திருட்டுப்பொருள் சேர்த்த வார்த்திகன் எனும் பார்ப்பானை சிறை வைத்தவன். இதனால் கோவில்களை மூடி பார்ப்பன கூட்டம் போரடியது. இறுதியில் வார்த்திகன் காலில் விழுந்து வணங்கி பாண்டியன் அத்திருட்டு பார்ப்பாணை விடுதலை செய்தான். இருந்தும் கோபம் தணியாத பார்ப்பணர்கள் கோவலன் கொலையுண்டதால் கண்ணகி மதுரையை தீயிட்டாள் என்னும் காரணத்தைக்கொண்டு மதுரையை எரித்தழித்தனர்.

உலகின் முதல் தோன்றிய குமரிநாட்டுத்தமிழ் எழுத்தினை பிராமி எழுத்தில் இருந்து தோன்றியதாக தமிழர்களை நம்ப வைத்தது.
அடிப்படை சொற்களை ஆரிய மொழியான சமஸ்கிருதமாக மாற்றுவது.
இசை, நாடகம், கணியம், மருத்துவம், பூகோலம் முதலிய தமிழறிவியல்கள் அனைத்தினையும் திருடியது மட்டுமல்லாது திரித்து அதனனைத்தையும் ஆரியமென்று ஆக்கியது. இதே போல கணக்கற்ற பொய்களால் தமிழையும் தமிழர் கண்டுபிடிப்புகளையும் இழிவுபடுத்துவதை 3000 ஆண்டுகளுக்கும் மேலாக கடமையாகவே கொண்டுள்ளனர். 


தொல்காப்பியத்தினையும் திருக்குறளினையும் ஆரியத்தினின்று எடுக்கப்பட்ட தமிழ் மொழிபெயர்ப்பு என்பதில் துவங்கி இன்று தமிழன் மட்டுமே கலந்துகொள்ளும் தீமிதி, தீச்சட்டி, தமிழனின் ஷ்டெய்லான ஷான்ஸ்க்ரிட் பேச்சு, நடைமுறை வரை அனைத்துமே ஆரியனின் கவர்ச்சி பொய்யால் தமிழன் அனுபவிக்கும் அசிங்கமே.


கோவில்கள் மற்றும் கடவுள் வழிபாடுகளை தமிழர்களின் பாரம்பரியம் போன்ற தோற்றத்தினை ஏற்ப்படுத்தியது.
கிரகங்களை பற்றிய தமிழர்களின் பூகோள ஆராய்ச்சிகளை திருடி, அதை திரித்து கட்டம் கட்டி ஜாதகமாக ஆரியனுக்கு சாதகமாக மாற்றி தமிழர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துவது.
பிழைப்பு தேடி வந்தவனுக்கு இன்றுவரை தாழ்ந்த இனமாகவே தமிழன் கருதப்படுவது.
தமிழை பேசுவதை தமிழனே கேவலமாக நினைக்கும் நிலைக்கு பாழ்படுத்தியது.
இத்தனையும் தாண்டி சட்டங்கள் கூட தனி தனியாக இருக்கும் கேவலம் எந்த நாட்டில் உண்டு?
ஒரு மனிதனை கொலை செய்த பார்ப்பானுக்கு மொட்டை போடுவதுதான் தண்டனை என்று இருக்கும் அவலம் எத்தனை பேருக்கு தெரியும்?

இயற்க்கை வழிபாடே தமிழனின் பாரம்பரியம்
இயற்க்கை வழிபாடு என்றதும் சூரியனுக்கு சூடம் காண்பிப்பது என்று நம் எண்ணம் தடுமாறினால் நாம் ஆரிய மாயையில் வீழ்ந்து கிடப்பதற்கு இதுவே ஆதாரம்.


படைப்பு:
சு.ரகுநாத்
thamizhmani2012@gmail.com

4 comments:

  1. நல்லாஇருக்கு

    ReplyDelete
  2. இளஞ்செழியன்23 Jun 2012, 00:47:00

    நல்லதொரு முற்போக்கு ஆதாரங்களை மக்களிடத்தில் கொண்டு செல்லும் உங்கள் நோக்கத்திற்க்கு வாழ்த்துக்கள். ஆரியர்கள் யார் என்று கூறியுள்ளீர்கள். அப்படியானால் தமிழர்கள் என்பவர்கள் யார்? நாங்கள் திராவிடர்கள் என்று கூத்தடித்துக் கொண்டிருப்பவர்கள் யார்? திராவிடம் என்றால் என்ன? இது போன்ற ஐயங்களுக்கு பதில் கிடைத்தால் உண்மை தெரிந்துவிடும், நாம் ஏன் இது போன்ற செய்திகளை மக்களிடம் எடுத்து செல்கிறோம் என்று?

    ஆரியர்களை யார் என்றும், அவர்களின் அபகரிப்புகளும் ஏன் என்றும் கூறுவதை விட, சாதி, மதங்களை விருப்பத்துடன் ஏற்றுக் கொள்பவர்கள் அல்லவா நாம். சமுதாயத்தில் பிறரைவிட நாங்கள் உயர்ந்தவர்கள் என்று எத்தனை ஆரியர்கள் அல்லாதவர்கள் கூறுகின்றனர். ஆகவே ஆரியர் அல்லாதவர்களுக்கு அவர்கள் யார் என்று கூற உங்கள் எழுத்துப் பயணத்தில் எடுத்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களை போன்றவர்களின் எழுத்துக்கள் மூலம் நிச்சயம் சமுதாயம் மாற்றம் அடைய வேண்டும்... வாழ்த்துக்கள் உங்கள் முற்போக்கு பயணத்திற்க்கு.

    ReplyDelete
    Replies
    1. ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் பெயரை தவிர வித்தியாசம் ஏதும் இல்லை. திராவிடர்கள் தமிழ் பகுதிகளில் ஆக்கிரமித்தது குறித்த இடுகை தயாராகிக்கொண்டு இருக்கிறது தோழரே..

      இப்போது இருக்கும் சாதி அமைப்புகளை தமிழர்களுள் உண்டாக்கியதே ஆரியர்கள் தான். இதனை அடுத்த இடுகையில் விவரமாக சொல்கிறேன்.
      உங்களின் கருத்துகள் என்னை மேலும் மெருகேற்றும். மிக்க நன்றி தோழரே..

      Delete