Friday 15 June 2012

மதுரையில் கண்மாயை காணவில்லை


             தண்ணீர், உயிர் வாழ்வதற்கான சொத்து.நீருக்காக உலக அரங்கில் போராட்டம் மூளும் இத்தருணத்தில் அதன் முக்கியத்துவம் குறித்து உணரவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கின்றோம். இன்னும் நாம் உணராதிருந்தால் இன்னொரு இருநூறு ஆண்டுகளில் மனித இனம் மாத்திரமல்ல, எந்த உயிரினமும் இப்புவியில் வாழ்வது அரிது. நம் முன்னோர்கள் செய்த தவறால் நாம் இப்படி சிக்கி தவிக்கின்றோம். இதே தவறை நாமும் செய்து நம் சந்ததிகளுக்கு வேதனை ஏற்ப்படுத்த வேண்டாம். இந்த நேரத்தில் அதே முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற பல நல்ல செயல்களையும் நாம் தொடர வேண்டும். அவர்கள் செய்த அந்த நல்ல செயல்களாலேயே, நாம் இன்று வரை உடலில் உயிர் பிடித்து வாழ்கிறோம்.

                        நாம் மட்டுமன்றி நம் தலைமுறைகளும் இப்புவியின் மடியில் நீக்கமுற வாழ தேவை நீர். "நீரின்றி அமையாது உலகு" என்று நம் முப்பாட்டன் முற்ப்போக்கு சிந்தனையுடன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உரைத்ததை உணர்ந்து நடப்போம். அவர் அன்று சொல்லிய கருத்து, அவரின் பேரப்பிள்ளைகள்  நம்மீது கொண்ட பாசமும் அக்கறையுமே காரணம். அதே போல நாமும் நம் சந்ததிகளின் மீது பாசமும் அக்கறையும் கொள்வோம்.

                       நம் உயிர் நாடிகள் ஆறுகள், ஏரிகள், கண்மாய்கள், ஊருணிகள், குளங்கள், குட்டைகள் போன்ற நீர் ஆதாரங்களே. இவற்றை நாம் பாதுகாத்தாலே போதும். ஆற்று மணல் அள்ளுவதும், ஏரிகளில் ஆக்கிரமிப்பதும், கண்மாய் ஊருணிகளில் குடியேறுவதும் நமக்கு நாமே சோற்றில் விடம் வைத்து கொள்வதற்கு சமம். சுவையாக இருக்குமோ என்று விடம் உண்ண விரும்புவோமா?

                      மதுரை கோயில் நகரம் என்று அழைக்கப்படுவதும் உண்டு. அது வெறும் புகழ்ச்சியே. அந்த புகழ் உயிர் வாழ உதவாது. உண்மையில் மதுரை ஒரு கண்மாய் நகரம். இது வரை மதுரையின் உள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கண்மாய் மற்றும் ஊருணிகளின் எண்ணிக்கை 38 . இன்னும் மறைத்து வைக்கப்பட்டுள்ள நீர்நிலைகள் எத்தனையோ! இந்த முப்பத்து எட்டும் கூட முழு பயன்பாட்டில் இல்லை என்பது தான் வேதனையான தகவல்.

             மதுரை நீர் நிலைகளின் விவரங்களும் அதன் அவலங்களும்

                                இது மதுரையின் நிலை தான். இன்னும் மதுரை மாவட்ட புறநகர் பகுதிகளான திருமங்கலம், எழுமலை, சாப்ட்டூர், சேடபட்டி, கள்ளிக்குடி,கல்லுப்பட்டி, பேரையூர், சிந்துபட்டி, உசிலம்பட்டி, சோழவந்தான், கருப்பட்டி, வாடிப்பட்டி, பள்ளபட்டி, அழகர்கோயில், வள்ளாலபட்டி, மேலூர் போன்றவற்றின் கண்மாய் நிலைகள் படு கேவலம்.

                                 நீர் நிலைகளை பாதுகாக்க துப்பில்லாத நாமெல்லாம் வாழ்ந்து என்ன பயன்? பணம் சம்பாதிப்பது மட்டும்தான் வாழ்க்கையா?

                           நம் தலைமுறைக்கு பணம் காசையும், சொத்தையும் சேர்த்து வைத்தோம் அவர்களின் ஆடம்பர வாழ்க்கைக்கு, ஆனால் முதலில் அவர்கள் அதை அனுபவிக்க உயிர் வாழ வேண்டுமே, அதற்க்கு எதை சேர்த்து வைத்தோம்?

                        தயவு செய்து மரம் வளர்ப்போம்.. மழை பெறுவோம்.. பெற்ற மழைநீரை சேமித்து வைக்கும் வங்கிகளான கண்மாய் ஊருணிகளை பாதுகாப்போம்.

படங்கள் மற்றும் நீர் நிலை தகவல்கள் உதவி:
தானம் அறக்கட்டளை.
தண்ணீருக்கான மதுரை மாரத்தான் ஒருங்கிணைப்பு குழு.
 மதுரை.


படைப்பு:
சு.ரகுநாத்
thamizhmani2012@gmail.com

4 comments:

  1. அருமையான விழிப்புணர்வு தகவல்கள்... மக்களாகிய நாம் இதனை உணர்ந்து, நீருக்கான ஆதாரங்களை காக்க முன்வர வேண்டும். இன்றே குடிநீருக்கான ஆதாரங்கள் குறைந்து... காசு கொடுத்து குடிநீரை வாங்கி குடித்துக் கொண்டிருக்கிறோம். நிலத்தடிநீர் ஒரு நாள் இல்லையென்றால் நாம் பாட்டிலிலும் கேன்களிலும் வாங்கும் நீர் மட்டுமே நமக்கு உதவும் வேறு பகுதி நிலத்தடியில் இருந்து... எத்த்னை கேன் தண்ணிர் நமக்கு தேவை ஒரு நாளைக்கு? சிந்தித்து நிலத்தடிநீரை காப்போம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் தோழரே.. கொஞ்சமேனும் நிலத்தடி நீரை பாதுகாத்தால்தானே அந்த பாட்டில் தண்ணீரும் சாதாரண விலைக்கு கிடைக்கும். கொஞ்ச காலத்தில் அதுவும் பெட்ரோல் விலை போல் ஏற்றம் கண்டால் என்ன செய்வது??

      Delete
    2. nalla muyarchi, kobam athigam,thodarnthu yeluthungal thambi

      Delete
    3. @ kannan நிச்சயமாக அண்ணா.. மிக்க நன்றி..

      Delete